பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறமையான மருத்துவர் எனப் பெயர் பெற்று இருந்தவர். அவரது வீடு, இராமநாதபுரம் அரண்மனைக்கு எதிரில் இருந்த வெற்றிலைக்காரர்கள் குடியிருப்பில் இருந்ததால், அடிக்கடி தினகரிடம் வந்து அளவளாவிச் செல்பவர். அன்று காலையில் பணியாளர் போய் அழைத்ததும் தனது மருந்துப் பையை மடியில் வைத்து பினைத்தவாறு விரைவாக அங்கு வந்தார். தினகர் அமர்ந்து இருந்த சோபாவிற்கு எதிரே நாற்காலியில் அமர்ந்தவாறு, தினகரது வலது கை மணிக்கட்டு நாடியில் தமது விரல்களை வைத்து நாடியின் இயக்கத்தை ஆய்வு செய்தார். அடுத்து அவரது கண் இமைகளை நீக்கி விழிகளைப் பார்த்தார்.

சில நொடிகளில் அவருக்கு தினகரது நிலை புரிந்துவிட்டது. தினகரது அருகில் நின்ற கொண்டிருந்த குஞ்சரம் நாச்சியாரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அங்கிருந்து எழுந்து வெளியே வந்தார். குஞ்சரம் நாச்சியாரும் வைத்தியர் பின்னால் முகப்பிற்கு வந்தார்.

r r - = = *

நாச்சியார் கருணையுள்ள இறைவன் இதுவரை

மகாராஜாவிற்கு நல்ல ஆயுளையும் செல்வாக்கையும் கொடுத்து, மகாராஜாவிற்கு கீர்த்தியும், புகழும் நிலைபெறச் செய்தான். இவ்வளவு சிறந்த உத்தமமான நமது மகாராஜாவை இறைவன் தம்மிடம் அழைத்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. நாடிகள் ஒன்றன் பின் ஒன்றாக நின்று கொண்டு வருகின்றன. இன்னும் இந்து நிமிடங்களில் அவரது இம்புலன்களும் அடங்கிவிடும். ஆதலால் மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள். ஆக வேண்டிய காரியங்களைப் பாருங்கள்” என்று

நாச்சியாரிடம் தெரிவித்து விட்டுப் புறப்பட்டார்.

II ()