பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகெர்ப்ப சம்பூதம் வித்யுத்தேஜசமப்ரபம்

(ராம்சக்கீ ஹஸ்தஞ்சமங்களம் ப்ரணமாம்யஹம்.

என்ற சமஸ்கிருத ஸ்லோகமானது, சுப்பிரமணியக் கடவுளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது பூமியின் கெற்பத்தி லுண்டான வரும், மின்னலுக்குச் சமான மான காந்தியையுடைய வரும், குமாரனென்று சொல்லப்பட்ட கடவுளாயும், சக்திமயமான வேலை கையில் தரித்தவராயுமுள்ள, மங்களமென்று சொல்லப்பட்ட மூர்த்தியை நான் தியானிக்கிறேன், என்பது இதன் பொருள்.

இச்சமஸ்கிருத ஸ்லோகத்தின் முதல் வசனத்தில் பூமியின் கெர்ப்பத்திலிருந்து உற்பத்தியானவரென்று கூறப்பட்டுள்ளது. பூமியின் கெற்பமானது சிருஷ்டியில் உத்கிருஷ்டமான மனித ஜாதியில் கன்னிகையிடமிருக்கிறது. ஆகையால் கன்னிகையின் கெற்பத்தில் குமாரக்கடவுள் குழந்தைவடிவமாக அவதாரம் செய்தாரென்பதும், அதையே முதற் கிருத்தியமாகச் செய்தாரென்பதும், இக்கவியின் முதல் வாக்கியத்தின் பொருள்.

இந்த உண்மையை மறைபொருளாய் வைத்து புராணிகர்கள் குமாரக்கடவுளின் பிறப்பைப் பற்றிப் பலவிதமாய் சொன்னதில் இப்பூமியின் கண் கெங்கையில் உற்பத்தியானாரென்று சொல்வதுமொன்று, இதற்கொப்ப 'காங்கேயன்’ என்ற பெயரும் குமாரக்

கடவுளுக்கு வழங்கி வருகிறது.

I 29