பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் ஆறுமுகமென்று சொல்லியிருக்கிறதல்லவா? ஆறு என்ற தொகையை குறிப்பிட்டுச் சொல்லக் காரண மென்ன? ஏன் ஜந்து அல்லது ஏழு முகங்களாகயிருக்கக் கூடாது ஏனென்றால் ஆறாவது தொகை சிருஷ்டி என்ற தொழிலைக் குறிக்கிறது. நமது வாழ்கையின் உபயோகத்துக்காகவே ஏற்படுத்தியிருக்கிற ஜோதிட சாஸ்திரத்தில் ஆறாவது ஸ்தானம் சத்துருஸ்தான மென்று காட்டியிருக்கிறது. அச்சத்துருவானவன் சிருஷ்டியில் வந்த தேவர்களுடைய கூட்டத்திலிருந்து தான் வரவேண்டியிருப்பதாலும், அப்படியே வந்ததாலும், ஆறாவது தொகை ஆதியில் சிருஷ்டியென்ற ஒரு தொழிலைக் குறித்து நின்றது. மனிதனுடைய சரீரமே தொழிலுக்காக ஏற்பட்டதென்பதற்கு இந்து விரல்களுள்ள அவன் கையே சாட்சி. எப்படியென்றால் இந்து விரல்களின் தொகைளை எண்ணிக் கருதுங்கள் 1, 2, 3, 4, 5, இந்தத் தொகையெல்லாம் கட்டிப்பாருங்கள். மொத்தத்தில் 15 என்ற எண் வருகிறது. இவ்வெண்ணின் முற் பகுதி 7 இயும் பிற்பகுதி 5 யும் கூட்டுங்கள் கூட்டி வந்த தொகை 6 ஆகும். ஆதலால் சிருஷ்டிகர்த்தாவான குமாரக்கடவுளுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் புத்திரனாகிய அவருக்கு 5 என்ற தொகையை விதித்து அவர் செய்யும் சிருஷ்டியின் தொழிலுக்கு ஆதியில் 6 என்ற தொகையை ஏற்படுத்தியது பொருத்தமாயிருப்பதைப் போல, மனிதனுடைய தொழிலுக்கும் அவனுடைய 5 விரல்களினால் 6-வது தொகையை அதி சூட்சுமமாய் குறிக்கும் கைகளை

சாட்சியென்று சொன்னேன்.

இன்னுங் கேளுங்கள் கல்லால விருகூடித்தின் கீழ்

130