பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சக்தியோடு சிவன் கலந்து சிருஷ்டியைச் செய்ததால் அந்த சக்தியான பூரீ மகாவிஷ்ணுவே பிரணவம் ! அப்பிரணவத்,ை விக்கிநவிநாயகராக பிரணவாஹாரமாய் உபாசித்து வருகிறோம். இவருக்கு பிரதானமான மந்திரத்தை எந்த சங்கற்பத்திலும், எந்தக் கர்மாவின் ஆரம்பித்திலும், நம்மாலாவது அல்லது கர்மாவை நடத்தி வைக்கும் உபாத்தியாயரினாலாவது,

சொல்லப்பட்டு வருகிறது.

"சுக்கிலாம்பரதரம் விஷ்னும், சசிவர்ணம்.”

என்ற மந்திரத்தை ஆரம்பத்தில் சொல்லிக்கர்மாவை நடத்துகிறோம். அதாவது வெள்ளை வஸ்திரம் என்ற நீதியை ஆடையாகக் கொண்ட வரை, விஷ்ணு என்று சொல்லப்பட்டவரை பரிகத்தத்தையே தமது நிறமாய் உள்ள வரை, என்று அர்த்தமுடைய மூலமந்திரத்தைச் சொல்லுகிறோம்.

பிரணவம் என்பது என்ன ?

ஆதியில் அந்தகார இருள் சூழ்ந்த வெளியில் அளவில்லாத மூலப்பிரகிருதி சக்ராகாரமாய் அசைவற்று இருந்ததின் மத்தியில், அதாவது நாம் பாற்கடலாய் பாவித்துச் செல்லும் ஆழியின் மத்தியில் பூரீமத் நாராயணனாக நாம் பாவிக்கும் சிவமும், குமாரனும், சக்தியும் அல்லது சத்து, சித்து, ஆனந்தம் என்று சொல்லப்படும் திரயம் அடங்கிய வடிவமானது யோக நித்திரையில், அண்ட பிண்ட சராசரங்களை யெல்லாம் மானசீகமாய் தியானித்தது. ஆகவே அண்ட பிண்ட சராசரங்களான சிருஷ்டி, தியான ரூபமாய் இருந்தது. அதன்மேல் தன் பூரண ஆவியின் வல்லமை நிறைந்த

13.5