பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியங்களையும் தனிப்பாடல்களையும் சேர்த்து ஆயிரத்திற்கும் அதிகமாக பாடல்களைப் பாடிள்ளார்.இசைத்துறையிலும், இவரது இசைப்பாடல்கள் ஈடும் இணையும் இல்லாத சாகித்யங்களாக விளங்குகின்றன. சென்ற நூற்றாண்டில் தன்னேரிலாத இசைப் புலவர்களாக விளங்கிய,வையை மகாவைத்தியநாத பாகவதர், இராமசாமி சிவன், குன்னக்குடிகிருஷ்ண ஜயர் போன்ற சங்கீத "சாம்ராட்டுகள்”. இந்த மன்னரது பாடலில் அமைந்து தொனிக்கும், கருத்தும் கேட்போர் மனதில் இனிமையைக்கிளறிவிடும் ராக, தாளக்கட்டுகளையும் போற்றியுள்ளனர்.

இந்த மன்னரது இசைத்திறமைக்கு ஒரு தமிழ்ப் புலவர் வழங்கியுள்ள காணிக்கை . இந்த மன்னருடன் இசைவாதில் தோற்ற நாரதமுனியும் விண்னிலே அலைந்து கொண்டு இருக்கிறார்.

" மந்தரநேர் புயத்தன் முத்துராமலிங்கச்

சேதுபதி மதுர கீதச் செந்தரம் ஒர்ந்து இயக்கரெல்லாம் தினமும்

மயல் உற்றதன்றி திருந்து வினைச் சுந்தர நாரதனாம் அந்தத் தும்புருவம்

இம்பரிடைத் தோற்றார் ஆகி அந்தரம் மேல் அலைந்தனரேல் அதற்குவமை எதைப் புகழ்வது அறிந்து மாதோ !

ஒப்புவமை இல்லாத இசைக்கலைஞர் "கல்வியிற் பெரியவன் கம்பன் ” என்பது உலக வழக்கு.

3.