பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்ப்புக்கு உதவுகின்ற உயிருட்டுகின்ற ஆதவனின் பெயரை பாஸ்கரர் , தினகரர் எனப்பெயர் சூட்டியிருப்பது ஒரு புதுமையான செயலாகும். ஒரு வேளை அவர்கள் இருவரும் பிற்காலத்தில் ஒளிமயமான சூரியனைப் போன்று வாழ்வில் சிறந்து புகழ் படைக்கும் மக்களாக அவர்கள் மலரக் கூடும் என அந்தத் தந்தையின் உள்ளம் நினைத்திருக்கும். அந்த நினைப்பு சரியானது தான் என்பதை இந்த இரு அரச குமாரர்களது பிற்கால சாதனைகள் உறுதிப்படுத்துகின்றன. தக்கார் தகவிலர் என்பது அவரது எச்சத்தால் காணப்படும் என்ற வள்ளுவரது வாக்கிற்கு இவர்களை விட வேறு சிறந்த எடுத்துக்காட்டு இருக்கமுடியாது.

பாஸ்கர சேதுபதி

மூத்தவரான பாஸ்கரர் சேது நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று நடத்திய காலத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஆன்மீகத்துறையில் ஒரு பெரும் புரட்சியையே ஏற்படுத்த முயன்றார். குறிப்பாக அவரது சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சமஸ்தானக் கோயில்களின் வழிபாடும் விழாக்களும் , ஆகமங்கள் அடிப்படையில் நடைபெறுவதற்கு தக்க ஏற்பாடுகளைச் செய்தார் . ஒரு சிறந்த சைவ சித்தாந்தியாகவும் செந்தமிழ்ப் புலவராகவும் இந்த மன்னர் விளங்கிய காரணத்தினால் பல மணி நேரம் புராண இதிகாசங்களையும் ஆன்மிக வாழ்வு பற்றிய அரிய வரலாறுகளையும் எடுத்துக்கொண்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் கடல்மடை திறந்தது போன்று

5