பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசிளங்குமாரர்களை, வளர்த்துப் பராமரித்து வரும் பொறுப்பை சென்னை துரைத்தானத்தார் ஏற்றுக் கொண்டனர். பாஸ்கரரும் தினகரரும் இராமநாதபுரத்தில் இருந்து சென்னை பட்டணம் பயணமாகார்கள். இவர்கள் இருவரும் சென்ளை பட்டனத்தில் தங்கி வாழ்வதற்கு ஏற்ற ஒரு மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டது. கர்னாடக நவாப்பாக இருந்து கி.பி.1795ல் காலமான வாலாஜா முகம்மது அலி அவர்கள் வழித் தோன்றல்கள் வாழ்ந்து வந்த ராயப்போட்டை அமீர் மகால் மாளிகையின் மேற்குப்பகுதியில் அமைந்து இருந்தது, இராமநாதபுரம் அரசகுமாரர்களுக்காக. மாளிகையின் பெயர் r r என்பது. இல்லத்திற்குப் பெயர் ஆங்கிலத்திலா என்று இன்று நாம் நினைக்கலாம்.

= == * g2. – L – GUD GUUT L– GJIL)

ஆனால், அன்று ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ் நாட்டில் ஆங்கில அரசாங்கம் செயல்பட்டு வந்ததால், எல்லாத் துறைகளிலும், நிலைகளிலும் ஆங்கில மொழியின் தாக்கம், ஆங்கிலேய நாட்டு பழக்கவழக்கங்கள், பண்பாடு, நடை,உடை, அனைத்திலும் பிரதிபலித்தது. நமது நாடு, மொழி, பண்பாடு, என்ற உணர்வுகள் அன்று எழுவதற்கு இடமே இல்லை. இந்தப் புதிய ஆங்கில மொழியும், நாகரிகத்தின் மக்களை மிகவும் கவர்ந்ததுடன் மக்களின் ஒரு பகுதியினர் புதிய நாகரிகமும் நாசகார எல்லைக்கே சென்று விட்டனர். இதனைக் பற்றி மனம் வருந்திய தமிழறிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையவர்கள், 'ஆரன வாயினர்,

மதுபானத்திலும் பூரணராயினர் ” என்று பாடினார்.