பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைவில், இராமநாதபுரம் , கோட்டைக்கும் இராமநாதபுரம் புறக்கோட்டைப் பகுதியான வெளிப்பட்டினத்திற்கும் இடையில் இருந்தது. தெற்கே வெற்றிலைக்கொடிக்கால்கள், சிலவீடுகள், ஒரு பள்ளிவாசல் தவிர, மற்ற மூன்று புறங்களிலும் மனித நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதி. அமைதி முழுமையாக ஆட்சி செய்யும் இயற்கையின் எழில் தேங்கிய இடம். சுமார் நூறு ஏக்கர் பரப்பில் கிழக்கே மட்டும் ஒரு சிற்றாறு.

நீண்டு வளர்ந்த காட்டு மரங்கள், பலவிதமான செடி கொடிகளும், வண்ண மலர் முகங்களைக் கொண்டு மென்மையான புன்னகையுடன் அமுகிய பறவைகளையும், அணில், முயல், கீரி, நரி, காட்டுப்பூனை, போன்ற சிறிய விலங்குகள் வரவேற்கும் பலவிதச்செடிகள், இன்னும் பன்னிர், மகிழ மரங்களுடன் அருவிகளும் சூழ்ந்து மனமும் பொலிவும் தரும் அழகுடன் விளங்கியது அந்த இடம்.

இந்த அற்புத அழகைச் சிதைத்துவிடாமல் மாளிகை அமைவதற்கு தேர்வு செய்யப்பட்ட தென்மேற்கே உள்ள சில மரங்களும் காட்டுச் செடிகளும் அகற்றப்பட்டு புதிய கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.இடைஇடையே அடிக்கடி தினகர் வந்து திட்டப்படி மாளிகை அமைப்பு நடைபெறுகிறதா என்பதை அக்கரையுடன் மேற்பார்வையிட்டு வந்தார். அவ்வாறு இளம் கற்பனையில் துளிர்த்த அழகு மாளிகை மெதுவாக உருப்பெற்றது. நான்கு மாத கால முடிவில் மாளிகை முழுமை பெற்று எழுந்து நின்றது. கம்பீரம் கலந்த

41