பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களை வாய்ப்பாட்டுவித்வான் பாடுவது போல _rгти у бот. இசையில் ஆரோகளை அவரோகனம், ஆலாபனம் நிரவல் எல்லாம் மிகத் தெளிவாக எவ்விதப் பிசுறும்

இல்லாமல் வயலின் பேசின.

அரசு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு யுவதிக்கு இவ்வளவு சிறப்பான தேர்ச்சியா 2 வித்வான் செனடையா செல்வி வசந்தவேணியின் திறமையைக் கண்டு பிரமித்துப் போனார். தொடர்ந்து மூன்று நாட்கள் காலைப் பொழுதுதில் செல்வி வசந்தவேணியின் வயலின் இசையைக் கேட்போர் காதுகளிலும் இதயங்களிலும் தேன் அமுதாய்க் கொட்டி நிரப்பும் இந்த இராமநாதபுரம் யுவதிக்கு கடவுள் அளித்துள்ள கடாட்சத்தை எண்ணி வியந்தார்.

அவருக்கு புதிதாக பயிற்சி எதுவும் கொடுக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை என்றாலும், வீணை வாசிப்பில் அவர்கடைப்பிடித்து வந்த பாணியை மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதுமானது என முடிவு செய்தார். ஏறத்தாழ, அடுத்த மூன்று மாதங்களில் வித்வானது இல்லத்தில் எதிரும் புதிருமாக இருவரும் அமர்ந்து தங்களது வயலின் இசையில் பண்பட்ட சங்கீதப் பாங்கினை இசைத்து வந்தனர். முதலில் வித்வான் தமது வயலின் பத்து அல்லது பதினைந்து நிமிட காலத்தில், ராக சஞ்சாரத்தில் அவர் கையாண்ட கற்பைைகளை இசை துணுக்கங்களை இசைத்துக் காண்பித்தார்.மிகவும் உன்னிப்பாக கேட்டு ஒலிப் பேழையில் பதிவு செய்தது போல, அடுத்த பத்து பதினைந்து நிமிடங்களில் செல்வி வசந்தவேணி அவரது வாசிப்பை அப்படியே இசைத்துக் காண்பிப்பார். பிரமித்துப் போன அவர் வாசிக்கும்

Z3