பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது, பல சபாஷ்களைச் சொல்லி மகிழ்ந்து போவார். தலையாய வித்வானும் தலை மாணவியும் இவ்விதம் இசை இன்பத்தைப் பரிமாறி வந்தனர்.

வித்வானது சிறப்பான பாணிகளைத் தெளிவாகத் தெரிந்து கொண்டதில் மாணவிக்கும் மகிழ்ச்சி, மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ள மாணவிக்கு மேலும் சில இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்ததில் குருவிற்கும் மன நிறைவு.

ஒரு நாள் மாலைப் பொழுதில் , செல்வி வசந்தவேணி வித்வானது இல்லத்தில் பழக் கூடைகளுடன் சென்றார் . அவரை வணங்கி, ஊர் திரும்புவதற்கு ஆசி பெற்றார். அப்பொழுது அவருக்கு তেrেচ தட்சனையாகக் கொடுப்பதற்கு தந்தை தினகர் சேதுபதி அனுப்பி வைத்து இருந்த நூறு ரூபாய் நோட்டுகளைக் கொண்ட உறை ஒன்றையும் வித்வானிடம் சேர்ப்பித்தார். மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்ட வித்வான் செல்வி வசந்தவேணியை வாழ்த்தி விடை கொடுத்தார். நாடு புகழும் சிறந்த வயலின் இசை வித்வாம்சினியாக செல்வி வசந்தவேணி உயர்வு பெற வேண்டும் என்பதே வித்வான் செனடய்யாவின் வாழ்த்து .

இராமநாதபுரம் குழுவினர் மைசூரை விட்டு புறப்பட்டனர். வழியில் சாமுண்டீசுவரி ஆலயம், பூநீ ரங்கப்பட்டினம் கோட்டை, இணையற்ற தியாகி திப்பு சுல்தானின் தரியாதவுலத் அரண்மனை, அவரது அடக்கவிடம் காவேரியின் சங்கமம், ஆகிய கற்றுலாத் தலங்களையும். கண்டு களித்து விட்டு இராமமந்திரம் திரும்பினர்.

74