பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

அவர்கட்குப்பின் திரு. N.M. பொன்னம்பலம்பிள்ளையவர்கள் தலைமையில் தமிழக அரசும் செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தைய செட்டியார் அவர்களும் பொதுமக்களும் உதவிய நிதியுதவியைக் கொண்டு நிறைவு செய்யப்பெற்றது. 1972-இல் குடமுழுக்கு இனிது நிறைவேறியது.

சிதம்பரம் நகரமன்றத் தலைவராகவும் பாராளுமன்றவுறுப்பினராகவும் சட்டமன்றவுறுப்பினராகவும் இருந்து கூட்டுறவுத் துறை முதலிய பலதுறைகளிலும் நாடுவளம் பெற நல்ல பல பணிகளைப் புரிந்த R. கனகசபைப்பிள்ளை அவர்கள் தம் தந்தையார் ஆடூர் இரத்தினசபாதிப்பிள்ளையவர்கள் விரும்பிய வண்ணம் தில்லைப் பெருங்கோயில் திருப்பணியில் ஈடுபாடுடையராயினர், அவர்களைத் தலைவராகவும் முன்னாள் சட்டமன்ற வுறுப்பினர் திருப்பணிச்செல்வர் G. வாகீசம்பிள்ளையவர்களைச் செயலாளராகவும் கொண்ட சிதம்பரம் சபாநாயகர் திருமதில் திருப்பணிக்குழு தில்லைப்பெருங்கோயிலின் வெளிப்புறப் பெரு மதிலாகிய வீரப்பநாயக்கர்மதில் திருப்பணியை இனிது நிறை வேற்றியது. இக்குழு 1972-இல் சிதம்பரம் சபாநாயகர் கோயில் திருப்பணிக்குழுவாக மாற்றியமைக்கப்பெற்றது. அப்பொழுது தமிழக அரசின் அறநிலையத்துறை ஆணையராகப் பணிபுரிந்த திரு.M.K. பாலசுப்பிரமணியம் அவர்களது உதவியுடன் தில்லைப் பெருங்கோயில் திருப்பணியைச் சிறப்புற நிகழ்த்துதற்கு முப்பத் தைந்துலட்ச ரூபா அளவில் பெரிய திட்டம் (மாஸ்டர்பிளான்) ஒன்று வரையப்பட்டது. அதன்படி தமிழக அரசின் நன்கொடை யாக ரூபா பத்தொன்பது லட்சமும், பொதுமக்கள் நன் கொடையாக ரூபா இருபதுலட்சமும், பழநி தேவத்தானம் M.S கட்டளையின் சார்பில் ராஜா சர் M.A. முத்தையசெட்டியார் குடும்பத்தார், சென்னை மருத்துவர் டாக்டர் இரத்தின வேல் சுப்பிரமணியம் ஆகியோர்மூலம் ரூபா பன்னிரண்டு லட்சமும் ஆக ரூபா ஐம்பது லட்சத்திற்கு மேல் செலவிடப்பட்டுச் சிதம்பரம் திருக்கோயிலின் நான்கு கோபுரங்களும் திரு மாளிகைப்பத்தியும் முக்குறுணிப்பிள்ளையார், கற்பக விநாயகர், சுப்பிரமணியர் முதலியமூர்த்திகளின் கோயில்களும், சுற்றுப்பிராகாரமும்,நிருத்த சபையும். பேரம்பலமும், கனகசபையும், ஆக எல்லாப்பகுதிகளும் திருப்பணிசெய்யப்பெற்றுத் தனித்தனியே குடமுழுக்கு விழா