பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

அற்ப இலாகாக்களில் வசூலித்தது பிரம்மாண்டமான தொகையாயிருக்கும் என்பது பரிஷ்காரமாகத் தெரியும் விஷயம். தங்கள் திவானால் ஏற்படுத்தப்பட்டுள்ள வரிகளோ நிரம்பவும் பளுவாய் இருக்கிறதென்று ஜனங்கள் உணர்ந்து அதைப்பற்றிப் பலவிதமாகப் பிரஸ்தாபிக்கிறார்கள். திவான் லொடபட சிங் பகதூரின் வரிகளையோ ஜனங்கள் அவ்வளவாய் உணர்ந்ததாகவே தெரியவில்லை. தங்கள் திவான் சட்டத்தைக் கரைகடந்த மேதாவி என்றும், ராஜாங்க நிர்வாகத்தில் மகா நிபுணர் என்றும் கவர்னர் ஜெனரலால் புகழப்பட்டவர். அப்படி இருந்தும், அரூபியான நமது திவான் லொடபட சிங் பகதூர் இவரை வெகு சுலபத்தில் ஜெயித்து, இவர் காரியத்திற்கு ஆகாத ஏட்டுச்சுரைக்காய் என்று ருஜுப்படுத்தி விட்டார். இவர் எப்போதும் சட்டம், சாட்சியம் ஆகிய இரண்டையுமே முக்கியமாக எண்ணி, உயிரற்ற இயந்திரம் போல வேலை செய்கிறவரேயன்றி, தம்முடைய பகுத்தறிவை உபயோகப்படுத்தி, யுக்தா யுக்தமறிந்து, ஜீவகாருண்யம், பச்சாதாபம் முதலிய குணங்களைக் கலந்துகொண்டு சட்டங்களை உபயோகப்படுத்தத் தெரிந்து கொள்ளாதவர். இவருக்கு நல்ல புத்தி புகட்டவேண்டும் என்று நமது திவான் லொடபட சிங் பகதூர் அரூபியாக இருந்து இத்தனை காரியங்களையும் மகா அற்புதமாக இயற்றிக் காட்டி இருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. ஒரு மனிதன் சாட்சிகள் இல்லாமலும், அல்லது, பொய்ச் சாட்சிகளை உண்டாக்கிக் கொண்டும், சட்டத்தில் அகப்பட்டுக்கொள்ளாமல், எவ்வளவோ அபாரமான காரியங்களை எல்லாம் எத்தனை வருஷ காலம் வரையில் வேண்டுமானாலும் செய்வது சாத்தியமான விஷயம் என்பது இப்போது நன்றாக விளங்கிவிட்டது. ஒருவனுடைய சொத்தை இன்னொருவன் அக்கிரமமாக அபகரித்துக் கொள்ளுகிறான். ஆனால் அதற்கு சாட்சிகள் இல்லை. ஆகவே, சட்டத்தின் படி பார்த்தால் அது குற்றமாகிறதில்லை. நியாயப்படி பார்த்தால் அது குற்றமே. ஆகையால் சட்டப்படி செய்யப்படும் காரியமெல்லாம் நியாய சம்மதமானது என்று நாம் எண்ணிவிட முடியாது. இவ்வளவு பெரிய சமஸ்தானத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள இந்த திவான் சட்டம் ஒன்றையே முற்றிலும் பின்பற்றி நடப்பது போதுமானதே யல்ல. இவர் தம்மாலேன்ற

74