பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

அந்த மகா அற்புதமும் ஆச்சரியகரமுமான வரலாற்றைக் கேட்ட அரசனும், உத்தியோகஸ்தர்கள், ஜனங்களும் முற்றிலும் திக்பிரமை கொண்டு ஒரே குழப்பமும், வியப்பும் உருகொண்டது போல நின்றுவிட்டனர். சிறிது நேரத்தில் அரசன் தமக்கெதிரில் இருந்த சேவகர்களைப் பார்த்து, அடேய் திவானை விட்டு விடுங்கள் எனக்குத் தெரியாமலே, நான் பணத்தை வட்டிக்குக் கொடுத்ததாக தஸ்தாவேஜிகள் எழுதப்பட்டு, அவைகள் என்னுடைய கைப்பெட்டிக்குள் வந்திருப்பது சாத்தியப்பட்டபோது, திவானுடைய கையெழுத்துடன் தாக்கீதுகள் தயாராவது ஒரு பெரிய காரியமல்ல" என்றார். உடனே சேவகர்கள் திவானை விட்டு விட்டார்கள்.

அதே காலத்தில் அரசன் எழுந்து தனது ஆசனத்தை விட்டுக் கீழே இறங்கி விரைவாக நமது சமயற்காரனண்டை போய் மிகுந்த மகிழ்ச்சியும் புன்னகையும் தோற்றுவித்துத் தனது கையால் அவரது கையைப் பிடித்து "ஐயா! உங்களை நான் இது வரையில் நிற்கவைத்துப் பேசியதைப் பற்றி நீங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். உங்களை நான் சாதாரணமான மனிதரென்று நினைத்தது தவறு. நீங்கள் அதிமாநுஷ சக்தியும், அபாரமான புத்தியும், எள்ளளவும் நீதிநெறியும் நடுநிலைமையும் தவறாத உத்தம குணமும் வாய்ந்த ஒரு பெரிய மகானென்றே நினைக்கிறேன். உங்களுக்கு எங்களால் நேரிட்ட தவறை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு, எங்களுக்கு நற்புத்தி கற்பித்து, இந்த ராஜ்ஜியத்தை செம்மைப்படுத்த வேண்டுமென்று, நீங்கள் எவராலும் செய்யமுடியாத இப்பேர்ப்பட்ட மகா அற்புதமான செய்கைகளைச் செய்து காட்டியதற்கு, நானும் என் பிரஜைகளும் ஏழேழு தலை முறையிலும் நன்றி விசுவாசத்தோடு உங்களை நினைக்கக் கடமைபட்டவர்களாகி விட்டோம். நீங்கள் இனி நிற்கக்கூடாது. வந்து என் பக்கத்திலுள்ள, திவானுடைய ஆசனத்தில் அமரவேண்டும்" என்று கூறி மனமார்ந்த பிரேமையோடு உபசரித்து அவனை அழைத்துக்கொண்டு போய் உட்கார வைத்த பின் தானும் தனது சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு "புண்ணிய மூர்த்தியே என் மனசில் தோன்றும் முக்கியமான ஒரு சந்தேகத்தைத் தாங்கள் நிவர்த்திக்க வேண்டும். இந்த ரெவினியு தாசில்தாரால் அனுப்பப்பட்ட பணம் முழுதும் கணக்குப்படி பத்திரத்தில் இருக்-

80