பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

புருஷரான பாராக்காரரையும், அவரது மனைவியையும் மறந்தவரேயன்று, குசேலர் எடுத்துச்சென்ற அவலை கிருஷ்ணபகவான் ஆசையோடு வாயில் போட்டுக்கொண்டவுடனே, முன்னவருது குடும்பத்தினர் இருந்த இடத்தில் எப்படி மாடமாளிகைகளும் குபேர சம்பத்தும மாயமாகத் தோன்றினவோ, அதுபோல, நமது சமயற்காரருக்கு திவான் உத்தியகோம் கிடைத்தவுடன் அவர் தமது மாதச்சம்பளமாகிய ஐயாயிரம் ரூபாயில் அந்தப் பாராக்காரருக்கு மாதா மாதம் இரண்டாயரம் ரூபாய் நிரந்தரமாகக் கொடுக்கவேண்டுமென்று உத்தரவு பிறப்பித்து விட்டார். அதுவுமன்றி, அவர் அந்த நகரத்திலுள்ள சகலமான ஜனங்களிடத்திலும் அந்தப் பாராக்காரருடைய மேலான குணங்கள் இருக்கும்படி தமது நன்றி விசுவாசத்தைத் தக்கபடி காட்டியதாகுமென்று நினைத்து, ஒரு குடும்பத்தில் தகப்பன் தனது குழந்தைகள் எல்லோரையும் எப்படி சன்மார்க்கத்தில் பழக்க முயன்று, எல்லோருக்கும் சமமான செல்வமும் உரிமைகளும் அளிப்பானோ, அதுபோல, அரசன் தனதும் பிரஜைகள் எல்லோரையும் நடத்தவேண்டு என்பதை அநுஷ்டானத்தில் செய்து நிரூபித்துக்காட்டினார்.

"வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.”

சுபம்! சுபம்!! சுபம்!!!

85