பக்கம்:திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி.pdf/65

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

51

திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி

1360 சாளக்கிராமம். பெரிய. 1-5-1.10; 4-7-9; பெரியாழ். 2-9-5.

சாற்றிச் சொன்னேன் - வற்புறுத்திச் சொல்லுகிறேன். பெரியாழ். 2-2-5.

சாற்றினேன் தடம் பொங்க - பெரிய. 10-2-10.

சாறுபட -உற்சவமுண்டாக, (விழவுபட) திருவாய்.7-4-2.

சிக்கென - உறுதியாக, விரைவாக. பெரியாழ். 2-7-6, 4-1-2, 4-5-9, பெரிய. 1-1-5. திருவாய். 2-6-1, 10-2-3. (தே) 5-71-9 விசயமங்கை. 4-59.1. பருப்பதம்.

1365 சிங்கப்பிரான், நரசிங்கமூர்த்தி. திருவாய். 2-8-9. பெரியாழ். 5-2-4.

சிங்கவேள் குன்றம் - அஹோபிலம். பெரிய. 1-7-1-10. சிங்கம் உறங்கிவிழித்தல் உவமை. திருப்பா. 23.

சிங்காமை - சங்கோசியாமல். பெரிய. 10-6-1.

சிசுபாலன் - வசுதேவனுக்கு உடன்பிறந்தவளும் அதனால் கண்ணனுக்கு அத்தையுமான சுருதசிரவை என்பவளுடைய மகன். திருவாய். 7-5-3.

1370 சிசுபாலன் - தலையைச்சிரைத்திட்டது. பெரியாழ். 3-9-3.

சிணுங்கி - முக்கால முதல். பெரிய. 10-5-1.

சித்தர் - அஷ்டமாசித்தியடைந்தோர். திருப்பள்ளி. 9.

சித்திர குப்தன் - இயமராசனது கணக்கன். பெரியாழ். 5-2-2

சித்திரகூடப்பொருப்பு - சித்திரகூடமலை. பெரியாழ். 2-6-7.

1375 சித்திரகூடம் - இராமன் வனவாச காலத்தில் தங்கியிருந்த ஒரு மலை. பெரியாழ். 3-10-6; பெருமாள். 10-5.

சிதகு - கடுஞ்சொல், குற்றம். பெரியாழ். 4-8-4; 4-9-2.

சிதைகிய - உடைந்த, திருவாய். 4-1-1.

சிந்தாமணி - நினைத்த மாத்திரத்தில் விரும்பியவற்றைத் தரக்கூடிய மணி, பெரிய. 1-10-9.

சிந்துபூமகிழும் திருவேங்கடம்- தூவினமலர்கள் அழகு கெடாத்திருக்கப்பெற்ற திருமலை. திருவாய். 3-3-2.

1380 சிந்துரம் - நெற்றியிலணியும் பொடி. பெரியாழ். 3-4-6.

சிமயம் - சிகரம். திருவிருத். 31.

சிரமம் தீர்தல் - இளைப்பாறப்பெறுதல். பெரியாழ். 5-4-8.

சிரமப்பட்டோம் - கஷ்டப்பட்டுச் செய்தோம். நாச்சி. 2-3.

சிரீதரன் - திருமால். திருவாய். 2-7-9.

1385 சிரீதரன் மூர்த்தி திருவாய்.4-4-2.

சிரீவர மங்கல நகர் - திருவாய். 5-7-1-11