பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1


தோற்றம், கூர்மையான பார்வை, ஆரவாரமற்ற தன்மை, அன்புடன் பழகுதல் அவரது சிறப்புப் பண்புகளாகும்.

திரு தி.வை. சதாசிவப்பண்டாரத்தாரால் எழுதி ஏற்கனவே வெளிவந்த நூல்கள் சில தற்போது ஒரு தொகுப்பாகத் தமிழ்மண் அறக்கட்டளையினரால் வெளியிடப்படுகின்றன. முதற் குலோத்துங்க சோழன், திருப்புறம்பயத் தல வரலாறு, காவிரிப்பூம்பட்டினம், செம்பியன்மாதேவித் தல வரலாறு ஆகியன இதில்

அடங்கும்.

முதற் குலோத்துங்க சோழன் 1930 இல் வெளியிடப் பட்டது. இது சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாட நூலாகவும் விளங்கியது. ஆசிரியரே கூறுவதுபோலத் தமிழகத்தையும் பிற பகுதிகளையும் முதற்குலோத்துங்கன் திறம்பட ஆண்ட ஐம்பதாண்டு நிகழ்ச்சிகளை விளக்குவது

66

ந்நூல். தமிழில் வரலாற்று நூல் எழுதுவதற்கான முன்மாதிரிபோல் அமைந்துள்ளது இந்நூல். அடிக் குறிப்புக்கள், பிற்சேர்க்கைகள், படங்கள் என ஆய்வு நூல்களில் காண்பன அனைத்தும் இந்நூலின் கண் உள்ளன. இத்தகைய ஆராய்ச்சி நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடு நிகழ்தலும், கிடைக்கும் கருவிகளால் சில செய்திகள் மாறுபடுதலும் இயல்பு" என ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது அவருடைய ஆய்வு மனப் பான்மையையும், நேர்மையையும் எடுத்துக் காட்டுவன ஆகும்.

திருப்புறம்பயம் ஆசிரியரது ஊர். புகழ்பெற்ற சிவத்தலம். இதனைச் சுற்றி இன்னம்பர், ஏகரம், திருவைகாவூர், திருவிசயமங்கை, மிழலை, சேய்ஞலூர், திருப்பனந்தாள் போன்ற சிறப்புமிக்க திருத்தலங்கள் உள்ளன. ஆசிரியர், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முறைமையில் இத்தலத்தின் சிறப்புக்களை எடுத்துக்