பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புறம்பயத் தல வரலாறு

111


இலங்கையில், கூட்டுப்பிரார்த்தனை இயக்கத்தை 1948ம் வருஷம் தொடங்கி, 'வானொலியில்' சைவசமய சம்பந்தமாக நல்லுரை பல நவின்று, எங்கும் ஆஸ்திக உணர்ச்சியை உண்டு பண்ணியவர்கள்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்திலும், ஆதீனத்திலும் "கூட்டுவழிபாடு " தொடர்ந்து நடத்தி சைவ சித்தாந்தப் பாடம் சொல்லி வருபவர்கள்.

இறந்தவர்கள் வாழும் நிலையைப் பற்றியும், அவர் களுடன் பேசும் முறைகளைப் பற்றியும், சமய சாஸ்திர, விஞ்ஞான முறையில் ஆராய்ச்சியும், அனுபவமும் உடையவர்கள். தமிழில் 20 அரிய நூல்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

சுவாமிகள் நிறுவி, நடைபெற்றுவரும் நிலையங்களாவன:-

1. திருவருள் தொண்டர் சபை, குலசேகரன்பட்டினம்.

2. திருவருள் உயர்நிலைப்பள்ளி, குலசேகரன்பட்டினம்.

3. திருவருள் தவநெறி மன்றம், மதுரை.

4. இந்து தர்மப் பிரசார சங்கம், சென்னை & மதுரை.

99

1946-ல் டெல்லியில் கூடிய அகில இந்திய தத்துவப் பேராசிரியர் மாநாட்டில் "உயிர்களும் உள் உடம்பும்" (The Soul and the Spiritual Body) என்பது பற்றியும், 25-3-71ல் கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் சாஸ்தம் கோட்டாவில் நடை பெற்ற உலக மத மகாநாட்டில் "இந்து மதத்தில் கடவுளும், சிருஷ்டியும்" (The God & Creation Hinduism) என்பது பற்றியும், 19-11-71ல் கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டம் எழுமலை தீவில் உள்ள ராமன் - தளியில் நடைபெற்ற “உலக சமாதான மகாநாட்டில்” உலக சமாதானத்திற்குரிய ஒரே வழி” (The only solution for world peace) என்பது பற்றியும் ஆராய்ச்சி உரைகளை ஆங்கிலத்தில் நிகழ்த்தி பல்லோரால் பாராட்டப் பெற்றவர்கள். கோயில் நிர்வாகம் :-

66

மதுரை ஸ்ரீ திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தின் தலைவர் அவர்கள், இத்திருக்கோயிலுக்கும் பரம்பரை