பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1





மகிழ்ச்சியுறுவதோடு அக்கழகத்தார்க்கு என்றும் நன்றி பாராட்டுங் கடமையுமுடையேன்.

இதனைப் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சித் துறையில் ஊக்கம் பிறக்குமாறு உரிய இடங்களில் பல மேற் கோள்கள் ஆங்காங்குக் கீழ்க் குறிப்புக்களாகக் காட்டப்பட்டிருக் கின்றன.

சரித்திர ஆராய்ச்சியில் எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் முதலில் உண்டுபண்ணியது திரு. T.A. கோபிநாதாரயர் அவர்கள் M.A. எழுதிய சோழவமிச் சரித்திரச் சுருக்க' மாதலின் அப் பெரியார்க்கும் எனது நன்றியுரியதாகும்.

இத்தகைய ஆராய்ச்சி நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடு நிகழ்தலும், னி கிடைக்கும் கருவிகளால் சில செய்திகள் மாறுபடுதலும் இயல்பு என்பது அறிஞர்கள் நன்கறிந்ததேயாகும்.

இந்நூலைத் திருந்திய முறையில் வெளியிட்டுதவிய சென்னை சாது அச்சுக்கூடத்தாரது பேரன்பு பாராட்டுதற் குரியதாகும்.

T.V. சதாசிவ பண்டாரத்தார்