பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5




1. சோழரும் சளுக்கியரும்

2

நம் தமிழகம்' சேரமண்டலம், சோழமண்டலம் பாண்டி மண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளையுடையதாக முற்காலத்தில் விளங்கிற்று. இவற்றுள் சோழமண்டலம் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காடு முதலான ஜில்லாக்கள் அடங்கிய ஒரு நாடாகும். இது குணபுலம்' எனவும் வழங்கப் பெறும்.

இதனைப் பண்டைக் காலமுதல் ஆட்சிபுரிந்து வந்தோர் தமிழ் வேந்தர்களுள் ஒருவராகிய சோழமன்னர் ஆவர். இவர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய தலைநகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. பிற்காலத்துச் சோழ மன்னர் களது ஆட்சிக் காலங்களில் தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் தலைநகரங்களாகக் கொள்ளப்பட்டன. சோழர் களுக்குரிய அடையாள மாலை ஆத்தியாகும்; கொடியும் இலச்சினையும் புலியாம். வட வேந்தரையொப்ப இன்னோர் சூரியகுலத்தினரென்றும் காசிபகோத்திரத்தினரென்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.

5

1. இமிழ்கடல் வரைப்பில் தமிழகம்’

.

2.

.

3.

.

4.

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்'-

தண்பனை தழீஇய தளரா விருக்கைக் குணபுலங் காவலர் மருமான்'

  • சிலப்பதிகாரம் - அரங்ககேற்றுகாதை 37.

தொல் - பொருள் - செய்யுளியல் - சூத்-79.

- சிறுபாணாற்றுப்படை - 78, 79.

· புறநானூறு - 45.

>

நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே’ ‘புலிபொறித்துப் புறம்போக்கி’

- பட்டினப்பாலை 35.

5.

கலிங்கத்துப்பரணி - தாழிசைகள் 173, 174.

விக்கிரமசோழனுலா - கண்ணிகள் 1, 2, 3.

இராசராசசோழனுலா - ஷெ 1, 2, 3.