பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1






தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1 விளைவதற்கு ஏதுவாகும் என்று கருதிக் குலோத்துங்கனது படை வலிமையையும் வீரத்தையும் குலைத்தற்குப் பெரிதும் முயன்றான். அவன், அம் முயற்சியில் வெற்றியுறும் வண்ணம் ஐந்து ஆண்டு களாகப் படைசேர்த்தும் வந்தான். இந்நிலைமையில் விக்கிர மாதித்தனுக்கும் அவனது தமையனாகிய இரண்டாம் சோமேச் சுரனுக்கும் ஒற்றுமை குலைந்து மனவேறுபாடு உண்டாயிற்று. உண்டாகவே, விக்கிரமாதித்தன் தன் தம்பியாகிய சயசிங்கனை அழைத்துக்கொண்டு மேலைச்சளுக்கியரது தலை நகராகிய கல்யாணபுரத்தை விட்டுச்சென்றான். பிறகு மேலைச் சளுக்கியரது இரட்ட மண்டலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சோமேச்சுரனாலும் விக்கிர மாதித்தனாலும் தனித்தனியாக ஆளப்படும் நிலையை அடைந்தது. இதனை யுணர்ந்த குலோத்துங்கன் சோமேச்சுரனைத் தன்பாற் சேர்த்துக் கொண்டான். பின்னர், விக்கிரமாதித்தன் தான் சேர்த்துவைத் திருந்த படைகளைத் திரட்டிக் கொண்டு குலோத்துங்கனோடு போர் புரியப் புறப்பட்டான். திரிபுவனமல்ல பாண்டியன், கதம்பகுலத்துச் சயகேசி முதலானோர் விக்கிரமாதித்தனுக்குப் பேருதவி புரிந்தனர். அவனது தம்பி சயசிங்கனும் அவன் பக்கல் நின்று வேண்டியாங்கு உதவினான். சோமேச்சுரன் குலோத்துங்கன் பக்கத்திருந்து போர் புரிந்து உதவுவதாக உறுதியளித்திருந்தான். இறுதியில் குலோத்துங்கனது படையும் விக்கிரமாதித்தனது படையும் துங்கபத்திரை யாற்றங்கரையில் எதிர்த்துப் போர் செய்தன. விக்கிரமாதித்தன் தன் தமையனாகிய சோமேச்சுரன் குலோத்துங்கனோடு சேர்ந்து தன்னுடன் போர் செய்ய இயலாத வாறு ஓர் சூழ்ச்சிசெய்து இடைநின்று தடுத்தான். இப்போரிற் குலோத்துங்கன் வெற்றியாதல் தோல்வியாதல் எய்தினான் என்று கூறுதற்கிடமில்லை. ஆயினும் நம் குலோத்துங்கனுக்கு உதவி புரிதற்குத் துணைப்படை கொணர்ந்த சோமேச்சுரன் தோல்வி யுற்றுத் தன் தம்பியாகிய விக்கிர மாதித்தனாற் சிறைபிடிக்கப் பட்டு நாட்டையும் இழந்தான்.' குலோத்துங்கனைச் சோழ நாட்டினின்று துரத்துவதற்கு விக்கிரமாதிதன் ஐந்து ஆண்டு

1. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம் - பக். 30.

2. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம் பக் - 34.