36
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1 தன்னடிப் படுத்த எண்ணி, இப்பாண்டியர் ஐவர்மீதும் தும்பை சூடிப் போர்க்கெழுந்தனன்.1 இதனை யுணர்ந்த பாண்டியர் ஐவரும் ஒருங்கு சேர்ந்து பெரும்படை யோடு வந்து இவனை எதிர்த்துப் போர் புரிந்தனர். இப்போரில் பெருவீரனாகிய நம் குலோத்துங்கனே வெற்றியடைந்தான். பாண்டியர் ஐவரும் புறங்காட்டி ஓடி ஒளிந்தனர்.2 குலோத்துங்கன் பாண்டி நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றியதோடு அவ்விடங்களி லெல்லாம் வெற்றித் தூண்களும் நிறுவினான். இப்போரில் குலோத்துங்கன் கைப்பற்றிய நாடுகளுள் முத்துச் சலாபத்திற் குரிய மன்னார்குடாக் கடலைச் சார்ந்த நாடும் பொதியிற் கூற்றமும் கன்னியாகுமரிப் பகுதியும் சிறந்தவை களாகும்.
5. சேரருடன் நடத்தியபோர் :- இது நம் குலோத்துங்கன் குடமலைநாட்டில் சேரரோடு நடத்திய போராகும். இதுவும் குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டில் நடைபெற்றது. ப்போரும் சேரரைத் தனக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர் களாகச் செய்யும் வண்ணம் குலோத்துங்கனால் தொடங்கப் பெற்றது. திருவனந்தபுரத்திற்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் மேலைக் கடற்கோடியிலுள்ள விழிஞத்திலும், திருவனந்த புரத்தைச் சார்ந்த காந்தளூர்ச்சாலையிலும் குமரி முனைக்கு வடக்கிலுள்ள கோட்டாறு என்ற ஊரிலும் சேரநாட்டு வேந்தனுக்கும் நம் குலோத்துங்கனுக்கும் பெரும்போர்கள் நடந்தன; சிறிதும் அஞ்சாது எதிர்த்துப் போர் புரிந்த மலை நாட்டாருள் பலர் போர்க் களத்தில் உயிர் துறந்தனர்.
3
1. வடகடல் தென்கடல் படர்வது போலத்
2.
3.
தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர்
ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி
வெரிநளித் தோடி அரணெனப் புக்க
காடறத் துடைத்து நாடடிப் படுத்து'
—
முதற்குலோத்துங்கசோழன் மெய்க்கீர்த்தி.
விட்ட தண்டெழ மீனவர் ஐவரும்
கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ
க. பரணி - தா.368.
வேலை கொண்டு விழிஞ மழித்ததுஞ்
சாலை கொண்டதுந் தண்டுகொண் டேயன்றோ’
—
க.பரணி - தா.370