40
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1
இத்திறம் நிகழ்வனவற்றைக் கண்ட குடிகளெல்லோரும், 'ஐயோ, மதில்கள் இடிகின்றனவே' வீடுகள் எரிகின்றனவே; புகைப்படலங்கள் சுருண்டு சுருண்டு எழுகின்றனவே; அரண் எங்குளது? நமக்குப் புகலிடம் யாண்டுளது? இங்குத் தலைவர் யாவர்? படைகள் வருகின்றன; அந்தோ! நாம் கெடுகின்றனம்! மடிகின்றனம்!!' என்று ஓலமிட்டுக்கொண்டு நாற்புறமும் ஓடி அலைந்தனர். அவ்வாறு ஏங்கித் துணுக்குற்ற குடிகளெல்லாம் 'ஐயோ! நம் மன்னன், குலோத்துங்க சோழற்கு இறுக்கக் கடவதாகிய திறை கொடாது உரைதப்பினான்; ஆதலின் எதிரே தோன்றியுள்ளது அம்மன்னனது படையே போலும்; அந்தோ! இனி என் செய்வது!' என்றலறிக்கொண்டு உரைகுழறவும் உடல் பதறவும் ஒருவருக்கொருவர் முன்னாக அரையிற் கட்டிய துகில் அவிழ ஓடித் தம் அரசனது அடிமிசை வீழ்ந்தனர். அங்ஙனங் குடிகள் தன்னடியில் வீழ்ந்து அலறி ஓலமிடுதலைக் கண்ட கலிங்கர் கோமானாகிய அனந்தவன்மன் வெகுளியினால் வெய்துயிர்த்து, கைபுடைத்து வியர்த்து, அன்னாரை நோக்கி 'யான் அபயனுக்கே யன்றி அவன் தண்டினுக்கு மெளியனோ?' என்றுரைத்துத் தடம்புயங் குலுங்குற நகைத்தனன். பின்னர், 'நமது நாடு கானரண், மலையரண், கடலரண் இவற்றாற் சூழப் பெற்றுக் கிடத்தலை அறியாது, அவன்படை வருகின்றது போலும்; நல்லது, சென்று காண்போம் என்று கூறினான்.'
அம்மன்னன் கூறியவற்றைக் கேட்ட எங்கராயன் என்னும் அமைச்சர்தலைவன், அரசர் சீறுவரேனும் அமைச்சனாகிய தான் உறுதியை யுரையாதொழியின் அது தன் கடமையினின்று தவறியதாகுமென்பதை நன்குணர்ந்தவனாய், அரசனை நோக்கி, ‘மன்னர் பெருமானே, அடியேன் கூறுவனவற்றை யிகழாது சிறிது செவிசாய்த்துக் கேட்டருளல் வேண்டும். வேற்றரசர் களைப் புறங்கண்டு வெற்றி கோடற்குச் சயதரன் படை போதா தோ! அவனே நேரில் வருதல் வேண்டுமோ? அவனுடைய படையினாற் பஞ்சவர் ஐவருங் கெட்ட கேட்டினை நீ கேட்டிலை போலும்; முன்னொருநாள் அவனது படையுடன் பொரு வானெழுந்த சேரர் செய்தி நின் செவிப்பட்ட தில்லையோ? அவன் விழிஞமழித்ததும், காந்தளூர்ச்சாலை கொண்டதும் தன்