46
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1
கின்றன. தஞ்சாவூர் ஜில்லாவைச் சார்ந்த மன்னார் குடியிலுள்ளதும் இப்போது இராச கோபாலசாமி கோயில் என்று வழங்கப் பெறுவதுமாகிய திருமால்கோட்டம் இவன் பெயரால் எடுப் பிக்கப் பெற்ற தொன்றாம். 'குலோத்துங்க சோழ விண்ணகரம்’ என்பது அதற்குரிய பழைய பெயர். அன்றியும் நாகப் பட்டினத்தின் கண் கடாரத்தரசனாகிய சூடாமணிவர்மனால் கட்டத் தொடங்கப்பெற்று அவனது மகனாகிய மாற விசயோத் துங்கவர்மனால் முடிக்கப்பெற்ற இராசராசப் பெரும்பள்ளி என்னும் புத்தவிகாரத்திற்கு நம் குலோத்துங்கன் விளை நிலங்களை நிபந்தமாக விட்டிருக்கிறான் கி.பி. 1090-ல் இக்கோயிலுக்கு இவ்வேந்தன் விட்ட நிபந்தங்களை யுணர்த்தும் செப்பேடுகள்' 'ஹாலண்டு' தேயத்திலுள்ள 'லெய்டன்' நகரத்துப் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப் பட்டிருத்தலை இன்றுங் காணலாம். இத்தகைய செய்திகளை யாராய்ந்து உண்மை காணுமிடத்து, இவன் தன் காலத்து வழங்கிய எல்லாச் சமயங்களிடத்தும் பொதுநோக்குடைய வனாய் அவற்றை அன்புடன் ஆதரித்து வந்தவன் என்பது இனிது பெறப்படு கின்றது. ஆயினும், இவன் சிவபிரானிடத்து ஆழ்ந்த பத்தியுடை வனாய்ப் பெரிதும் ஈடுபட்டிருந்தான் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். இவன் எய்தியிருந்த திருநீற்றுச் சோழன் என்ற அருமைத் திருப்பெயரொன்றே இதனை நன்கு வலியுறுத்தும். ஆகவே இவனைச் சிறந்த சைவர் தலைமணி என்று கூறுதல் எவ்வாற்றானும் பொருத்தமுடையதேயாகும்.
1. கடாரம் மலேயாவின் மேல்கரையில் தென்பக்கத்தில் கெடா என்னும் பேருடன் உள்ளது.
2. The Smaller Leiden Grant.