48
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1
இவன் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த வேந்தன் ஆவன்; சங்கத்துச் சான்றோர் நூல்களையும் பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலாய நூல்களையும் நன்கு பயின்றிருந்தான். ஆசிரியர் சயங்கொண்டாரும் இவனைப் பண்டித சோழன் என்று கலிங்கத்துப் பரணியில் ஓரிடத்தில் குறித்துள்ளார்.1 வன் புலவர்களது கல்வித் திறத்தை அளந்து கண்டறிதற்குரிய பேரறிவு படைத்தவனாயிருந்தமையின் அன்னாரிடத்துப் பெருமதிப்பும் அன்பும் வைத்திருந்தான். அன்றியும், அவர்கட்கு வேண்டியன அளித்துப் போற்றியும் வந்தான். எனவே இம்மன்னன் புலவர்களைப் புரந்துவந்த பெருங்கொடை வள்ளல் ஆவன். இவன் 'கலையினொடுங் கவிவாணர் கவியினொடும் இசையி னொடும் பொழுது போக்கி வந்தனன் என்பர் கவிச்சக்கர வர்த்தியாகிய சயங்கொண்டார் இவன், செந்தமிழ்ப் புலமை யுடையவனாயிருந் தமையோடு வடமொழிப் பயிற்சியும் பெற்றிருந்தான். அன்றியும், இவன் வேங்கிநாட்டில் ஆட்சிபுரிந்த போது அந்நாட்டு மொழியாகிய தெலுங்கே அரசாங்கமொழி யாக அமைந்திருந்தது. வேங்கி நாட்டிலுள்ள இவனது கல்வெட்டுக் களும் தெலுங்கு மொழியில் காணப்படுகின்றன. எனவே, இவன் தெலுங்கு மொழியையும் கற்றவனாதல் வேண்டும். ஆகவே, தமிழ், ஆரியம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இவ்வேந்தன் நல்ல பயிற்சியுடையவனாயிருந் தனன் என்பது நன்கு புலப்படுகின்றது.
அன்றியும் இவ்வேந்தன் இசைத் தமிழ் நூல் ஒன்று இயற்றியுள்ளனன் எனவும் அந்நாளில் இசைவாணர்களாகிய பாணர்கள் இவ்வேந்தனது இசை நூலைப் பயின்று நன்கு பாடி வந்தனரெனவும் இவன் தேவிமார்களுள் ஒருத்தியாகிய ஏழிசை வல்லபி என்பாள் தன் கணவன் இயற்றிய இசை நூலைப் பயின்று நன்கு பாடி வந்தனள் எனவும் கலிங்கத்துப்பரணி ஆசிரியர் கூறியுள்ளார்.
நம் வளவர்பெருமான் நூலறிவு எய்தியிருந்ததோடு இயற்கையில் நுண்ணறிவும் அமையப்பெற்றிருந்தான்; நல்லறிஞர்
1. க.பரணி -தா.519
2.
ரை 264.