52
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1
கி.பி. 1120-ல் நம் குலோத்துங்கன் விண்ணுலகெய்தியபின்னர் அரியணை யேறிச் சக்கரவர்த்தியாக முடிசூடிக் கொண்டு ஆட்சி புரிந்தவன் இவ்விக்கிரம சோழனேயாவன். இவனுக்குத் தியாக சமுத்திரம் அகளங்கன் முதலான வேறு பெயர்களும் உண்டு. புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் இவ்வேந்தன் மீது 'விக்கிரம சோழனுலா' என்று ஓர் உலாப் பாடியுள்ளனர். இம் மன்னன் இப் புலவர் பெருந்தகையைப் பெரிதும் பாராட்டி ஆதரித்து வந்தான்.
1
இரண்டாம் மகனாகிய இரண்டாம் இராசராசன் என்பான் கி.பி. 1077 முதல் 1078 வரை ஓராண்டு வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாயமர்ந்து அதனை அரசாண்டனன்; பின்னர், தன் தந்தையிடத்தமர்ந்து அணுக்கத் தொண்டுகள் புரிதல் வேண்டு மெனச் சோழ மண்டலத்திற்குத் திரும்பிவந்து விட்டான்.2 மூன்றாம் மகனாகிய வீரசோழன் என்பவன் தன் தமையனாகிய இரண்டாம் இராசராசனுக்குப் பின்னர் வேங்கி நாட்டிற்கு அரசப் பிரதிநிதியாக அமர்ந்தான்.3 அங்கு அவனது ஆட்சி பல ஆண்டுகள் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது.
குலோத்துங்கனது மற்றை மக்களைப் பற்றிய வரலாறு இப்போது புலப்படவில்லை.
குலோத்துங்கன் சுற்றத்தினர் :
1. தந்தையைப் பெற்ற பாட்டன் ... விமலாதித்தன்.
2. தந்தையைப் பெற்ற பாட்டி ... குந்தவ்வை II.
3. தந்தை ... கீழைச்சளுக்கியனாகிய இராசராசநரேந்திரன்
4.தாய்....
5. உடன் பிறந்தாள்
6.மனைவியர்
....
....
அம்மங்கைதேவி I.
குந்தவ்வை III.
.....
மதுராந்தகி, ஏழிசைவல்லபி,
1.
தியாகவல்லி,
விக்கிரமசோழனுலா - கண்ணிகள் 59, 152, 182, 209,216,256, 284.
2. S.I.I.Vol. I. No. 39-A Grant of Virachoda.
3. Do. Do.