பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்குலோத்துங்க சோழன்

57


அவற்றுள் தில்லையம்பலம் பொன் வேய்ந்தமையும், அங்கு நூற்றுக்கால் மண்டபம், பெரிய திருச்சுற்று மாளிகை, தேவாரம் ஓதுதற்குரிய மண்டபம், சிவகாமகோட்டம் முதலியவற்றைக் கட்டுவித்தமையும் சிறந்தனவாம். அன்றியும், இவன் தியாக வல்லி முதலான ஊர்களைப் பொன்னம்பலவாணருக்குத் தேவதான இறையிலியாக விட்டிருக்கின்றனன். சமயகுரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகளை ஆட்கொண்டருளிய திருவதிகை வீரட்டானேச்சுரர் திருக்கோயிலில் இவன் செய்துள்ள அருந் தொண்டுகள் பலவாகும். அங்குக் காமகோட்டம் எடுப் பித்தும், பொன்வேய்ந்தும், ஆடரங்கும் வேள்விச் சாலையும் அமைப்பித்தும், தேவதான இறையிலி விடுத்தும் செய்த அருந் தொண்டுகள் அளவிறந்தன என்பர். இவற்றால் இவனது சிவபத்தியின் மாட்சி இத்தகையதென்று நன்கு புலப்படுகின்ற தன்றோ? இனி, இவன் சைவசமயத்திற்குப் புரிந்துள்ள அரும் பணிகளுட் சிறந்தது மூவர் அருளிய தேவாரப் பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம்பதியிற் சேமித்து வைத்தமையே யாகும். 1 இவன் இவ்வாறு ஆற்றிய அரும் பெருந் தொண்டுகளை விளக்கக்கூடிய பல வெண்பாக்கள் தில்லையம் பதியிலும் திருவதிகையிலும் உள்ள கோயில்களில் வரையப் பட்டுள்ளன.2

வன், விக்கிரமசோழன் ஆட்சியிலும் இத்தகைய உயர் நிலையிலே இருந்தனன் என்பது விக்கிரமசோழன் உலாவடி களால் புலனாகின்றது.3

1. S.I.I. Vol. VI, No. 225.

2. Ins. No. 369 of 1921; M.E.R. 1922; செந்தமிழ்த் தொகுதி 23

3. விக்கிரமசோழனுலா - கண்ணிகள் 78, 79.