பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்குலோத்துங்க சோழன்

59


எடுத்துரைத்துப் புகழ்ந் திருத்தலால் இவர் சைனமதப் பற்றுடைய வராயிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலப்படுகின்றது. இவர் தாம் பாடியுள்ள கலிங்கத்துப்பரணியில் கடவுள் வாழ்த்து என்ற பகுதியில் சிவபெருமான், திருமால், நான்முகன், சூரியன், கணபதி, முருகவேள், நாமகள், துர்க்கை, சத்த மாதர்கள் என்ற இன்னோர்க்கு வணக்கங் கூறியிருத்தலாலும் இவர்களுள் சி பருமானுக்கே முதலில் வணக்கங் கூறி யிருத்தலாலும் இவர் பரணிபாடியகாலத்தில் சைவமதப் பற்றுடையவராக மாறி இருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்குகின்றது. ஆகவே, இவர் முதலில் சைனமதப் பற்றுடையவராயிருந்து சைவமதத் தினனாகிய குலோத்துங்கசோழனையடை அவனது அவைக்களப் புலவராயமர்ந்து பின்னர், சைவமதப் பற்றுடையவராயினார் போலும்.

இனி, இப்புலவர் தம்முடன் வாதம்புரிவான் போந்த தென்னாட்டுப் புலவர் சிலரை வென்ற காரணம் பற்றி, 'சயங் கொண்டார்' என்றழைக்கப் பெற்றனர் என்பர். ஆயின் இவரது இயற்பெயர் யாதென்பது இப்போது தெளியக்கூடவில்லை.

கலிங்கரைத் தொலைத்து வாகைமிலைந்த குலோத்துங்கன் இப்புலவரை நோக்கி, 'புலவீர்! யானுங் சயங் கொண்டானா யினேன்' என்றனன். உடனே புலவர், 'அங்ஙனமாயின், சயங் கொண்டானைச் சயங்கொண்டான் பாடுதல் மிகப் பொருத்த முடைத்தன்றோ!' என உரைத்துப் போய், சின்னாட்களில் 'கலிங்கத்துப்பரணி' என்ற ஓர் அரிய நூலை இயற்றிவந்து அரசனது அவைக் களத்தே அரங்கேற்றினர். அப்போது அப்பரணி நூல் பாடல்களைப் பரிவுடன் கேட்டுக் கொண்டு வீற்றிருந்த வேந்தர் பெருமான் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், பரிசிலாகப் பொற்றேங்காய் களை ஒவ்வொன்றாக உருட்டித்தந்து இவரையும் இவரியற்றிய நூலையும் பெரிதும் சிறப்பித்தனன்.

இக்கதை எவ்வாறாயினும், இப்புலவர், தாம் அரசன் பாற்கொண்ட பேரன்பின் பெருக்கத்தால் அவனது கலிங்க வெற்றியைச் சிறப்பிக்க கருதி, 'கலிங்கத்துப் பரணி' என்ற நூல் பாடினரெனக் கோடலில் இழுக்கொன்றுமில்லை. பரணி நூல்