68
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1
என்றும் ஈரோட்டிலுள்ள முதற் பராந்தகசோழன் கல்வெட்டு ஒன்று உணர்த்துகின்றது.1 நாடுகாவல் என்னும் வரி பாடி காவல் எனவும் வழங்கும். இஃது ஊர்களைக் காத்தற்கு வாங்கிய ஒரு தனிவரியாகும். உல்கு என்பது சுங்க வரியாகும். ஈழம்பூட்சி என்பது கள் இறக்குதற்குச் செலுத்த வண்ேடிய வரியாகும்.
6. நில அளவு : ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர்களை முறையாக அளந்தாலன்றி அங்கு விளைநிலங்கள் எவ்வளவு உள்ளன என்பதும் அவற்றிற்குரிய நிலவரியாகிய காணிக்கடன் குடிகளிடத்திலிருந்து அரசாங்கத்திற்கு எவ்வளவு வரவேண்டும் என்பதும் நன்கு புலப்பட மாட்டா. ஆதலால், சோழ இராச்சியம் முழுமையும், முதல் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் ஒரு முறையும், முதல் குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையும், மூன்றாம் குலோத்துங்கசோழனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையும் அளக்கப்பட்ட டது.உ
2
இவை முறையே கி.பி. 1001, கி.பி. 1086, கி.பி. 1216-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவையாகும்.
நிலம் அளந்தகோலை ‘உலகளந்தகோல்' என்று வழங்குவர். இக்கோல் பதினாறுசாண் நீளமுடையது. நிலங்களை நீர்நிலம், கொல்லை, காடு என்று வகுத்துள்ளனர். இவற்றுள், நீர்நிலம் கொல்லை என்பன முறையே நன்செய் புன்செய்களாகும். நிலங்கள் நூறுகுழிகொண்டது ஒருமா ஆகவும் இருபதுமா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப் பெற்றன. வேலி ஒன்றுக்கு நூற்றுக்கல விளைவுள்ளதும் அதற்குக் கீழ்ப் பட்டது மென நிலங்கள் இருதரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்நாளில் நிலத்தின் எத்தணைச் சிறுபகுதியும் விடாமல் நுட்பமாக அளக்கப் பெற்றுள்ளது என்பது 'இறையிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டுமாக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்குமாவினால் இறைகட்டின காணிக்கடன்' என்பதனால் நன்கு விளங்கும். நிலத்தையளந்து
1. The Historical Sketches of Ancient Dekhan, page 348.
2. Do. pages 357 & 358.