பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்குலோத்துங்க சோழன்

69


எல்லை யறிந்து அங்குப் புள்ளடிக்கல் நடுவது வழக்கம் என்பதும் பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.

7. இறையிலி - நம் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் வரி விதிக்கப்பெறாமல் ஒதுக்கப்பெற்ற நிலங்கள் யாவை என்பது முன்னரே விளக்கப்பட்டது. சைவ வைணவ திருக்கோயில் களுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதானம் எனவும், சைன பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பெற்றவை பள்ளிச் சந்தம் எனவும், பார்ப்பனர்க்கு விடப்பெற்றவை பிரமதேயம் பட்ட விருத்தி எனவும், அறநிலையங்கட்கு விடப் பெற்றவை சாலா போகம் எனவும் வழங்கப்பெற்றன. புலவர்க்கு அளிக்கப்பெற்றது புலவர் முற்றூட்டு எனப்படும்.

8. நாணயங்கள் :- நம் குலோத்துங்கன் காலத்தில் பொன்னாலுஞ் செம்பாலுஞ் செய்யப் பெற்ற காசுகள் வழங்கி வந்தன. இக்காசுக்களுள் சில இக்காலத்தும் சிற் சில விடங்களிற் கிடைக்கின்றன. அக்காலத்துச் சோழ மன்னர்களது நாணயங்கள் எல்லாம் ஒரே எடையுள்ளனவாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்று பழைய நாணயங்களை ஆராய்ந்து அரியநூல் ஒன்று எழுதி யுள்ள டாக்டர் கன்னிங்காம் என்ற துரைமகனார் வரைந் துள்ளனர். காய்ச்சி உருக்கினும் மாற்றும் நிறையும் குன்றாதது என்று அதிகாரிகளால் ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டதற்கு அடையாள மாகத் துளையிடப் பெற்ற துளைப்பொன்னும் அந்நாளில் வழங்கிற்று.

1

9. அளவைகள் :- அக்காலத்தில் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்கு வகைப்பட்ட அளவைகளும் வழக்கில் இருந்தன. இவற்றுள் எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். மணி, பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள், கழஞ்சு, மஞ்சாடி, குன்றி என்னும் நிறைகல்லாலும், செம்பு, பித்தளை, வெண்கலம், தரா முதலான தாழ்ந்த பொருள்கள் பலம் கஃசு என்னும் நிறைகல்லாலும் நிறுக்கப்பட்டு வந்தன. அரசாங்க முத்திரையிடப்பெற்ற நிறைகல் குடிஞைக்கல்

11. (a) S.I.I. Vol. III, No.96.

(b) Do. page 229 Foot - note.