பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 முன் அரசாண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பான் தன் ஆட்சிக்காலத்திலேயே இவ்வரசகுமாரனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியிருத்தலை நோக்குமிடத்து, இவன் அவனுடைய புதல்வன் அல்லது தம்பியாயிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுளது. ஆனால், ஒருதலையாகத் துணிவதற்குத் தக்க சான்றுகள் கிடைக்கவில்லை. குலசேகர பாண்டியன் தன் தந்தை விக்கிரம பாண்டியனைப் பெரியதேவர் என்று கல்வெட்டுக்களில் குறித்திருப்பதுபோல் இச்சுந்தர பாண்டியனும் தன் கல்வெட்டில் குறித்துள்ளமையாலும், 1 இவ் விரு பாண்டிவேந்தரும் அழகப்பெருமாள் என்ற தலைவன் ஒருவனைத் தம் மைத்துனன் என்று கல்வெட்டுக்களில் கூறியுள்ளமையாலும் இவ்விருவரும் உடன்பிறந்த சோதரர்க ளாகவே இருத்தல் வேண்டும் என்றும், எனவே, சுந்தர பாண்டியன் குலசேகர பாண்டியனுக்குத் தம்பியாவன் என்றும் ஆராய்ச்சியில் வல்ல அறிஞர்கள் கருதுகின்றனர்.3 தமிழ் மன்னர்கள் தமக்குமுன் அரசாண்டவர்களைப் பெரியதேவர் எனவும், பெரியநாயனார் எனவும், பெரிய பெருமாள் எனவும் பொதுவாகக் கூறிக்கொள்ளும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தது என்பது கல்வெட்டுக் களால் அறியக்கிடக்கின்றது. ஆகவே, முதலில் எடுத்துக் காட்டப்பெற்ற காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாயில்லை. எனினும், இரண்டாம் காரணம் ஓரளவு வலியுடையதாயிருத் தலால் அதனை எளிதாகத் தள்ளிவிட இயலவில்லை. ஆதலால், சுந்தரபாண்டியன் குலசேகர பாண்டியனுக்குத் தம்பியாகவும் இருத்தல் கூடும். பாண்டியர்களின் கல்வெட்டுக்கள் எல்லாம் வெளிவந்தால் இத்தகைய ஐயங்கள் நீங்கலாம்.

திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரந் தாலூகாவி லுள்ள திருவாலீசுவரத்திற் காணப்படும் கல்வெட்டொன் றாலும் இராமநாதபுரம் ஜில்லா திருப்புத்தூரிலுள்ள கல்வெட்

1. Ins. Nos. 83 of 1927 and 47 of 1926.

2. Ins. 298 of 1927 - 28; Ins. 84 of 1916; Ins. 183 of 1935-36.

3. Annual Report on South Indian Epigraphy for 1926 - 27, part 41 Ibid, for 1927 - 28, part II para 17.

4. Ins. 340 of 1916.