பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

92

89

டொன்றாலும்' இப்பாண்டி வேந்தன் புரட்டாசித் திங்கள் அவிட்ட நாளில் பிறந்தவன் என்பது நன்கு புலனாகின்றது. இவனது மெய்க்கீர்த்தி ‘பூமருவிய திருமடந்தையும் புவி மடந்தையும் புயத்திருப்ப என்று தொடங்குவதாகும். அஃது இனிய செந்தமிழ் நடையில் அமைந்த நீண்ட மெய்க்கீர்த்தி யாகும். அதனால் இம்மன்னன் காலத்து நிகழ்ச்சிகள் பலவற்றை அறிந்து கொள்ளலாம். அதன் துணைகொண்டு இவன் காலத்துப் போர் நிகழ்ச்சிகளை ஆராய்வாம்.

இவ்வரசன் ஆட்சிக்காலத்தில் சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து அரசாண்டவன் மூன்றாங் குலோத்துங்க சோழன் மகன் மூன்றாம் இராசராசசோழன் ஆவன். அச் சோழமன்னன் தன் நாட்டைக் காத்தற்கேற்ற ஆற்றலும் ஆண்மையும் அற்றவனாயிருந்தான். அதனையறிந்த இச் சுந்தரபாண்டியன், சோழநாட்டின் மேல் படையெடுத்துச் சென்று தன் வெற்றிப்புகழை யாண்டும் பரப்ப வேண்டும் என்று கருதினான். அதற்கேற்ப, இவன் முன்னோர்களாகிய பாண்டி வேந்தர்கள் பல ஆண்டுகளாகச் சோழர்க்குத் திறை செலுத்திக் கொண்டு குறுநில மன்னராக வாழ்ந்து வந்தமையும், இவன் இளமைப்பருவத்தில் மூன்றாங் குலோத்துங்க சோழன் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்து அங்குப் பல அழிவு வேலைகள் நிகழ்த்திச் சென்றமையும் இவன் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்தன. இந்நிலையில், தன் முன்னோர்கள் பாண்டி நாட்டை ஆட்சிபுரியும் உரிமையை இராசராசசோழன் முன்னோர்களது பேருதவியினால் பெற்றனர் என்பதையும் இவன் அறவே மறந்தொழிந்தான். ஆகவே, சோழ நாட்டின் மேல் படையெடுப்பதற்கு இப்பாண்டி மன்னன் தக்க காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் என்பது தெள்ளிது. பேராற்றல் படைத்த பெருவீரனாகிய மூன்றாங் குலோத்துங்க சோழனும் கி. பி. 1218-ஆம் ஆண்டில் சோணாட்டில் இறந்து விடவே, காலங்கருதிக் கொண்டிருந்த சுந்தரபாண்டியன் சில திங்களில் பெரும்படையைத் திரட்டிக்கொண்டு கி. பி. 1219-ல் அந்நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று மூன்றாம் இராச

1. Ins. 183 of 1935-36.

2.S. I. I, Vol. V, No. 431; செந்தமிழ்-தொகுதி XII, பக். 446-50.