பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

91

மனையில் சோழரது முடிசூட்டுவிழா நிகழும் மண்டபத்தில் வீராபிடேகஞ் செய்து கொண்டான். பிறகு, இவ்வேந்தன் தில்லையம்பதிக்குச் சென்று பொன்னம்பல வாணரை வணங்கி மகிழ்கூர்ந்தான்.

பின்னர், இப்பாண்டி மன்னன் தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது பொன்னமராவதியிலிருந்த தன்னுடைய அரண்மனையில் சில நாட்கள் வரையில் தங்கியிருந்தான்; அந்நாட்களில் நாட்டை இழந்த இராசராசசோழனை அழைப் பித்து, தனக்கு ஆண்டுதோறும் கப்பஞ் செலுத்திக் கொண்டு சோணாட்டை ஆட்சிபுரிந்து வருமாறு ஆணையிட்டு அந் நாட்டை வழங்கினான். இராசராசசோழனும் தன் நாட்டிற்குச் சென்று முன்போல் ஆட்சிபுரிந்து வருவானாயினன்.

இனி, சுந்தரபாண்டியனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள், இவனைச் 'சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்" எனவும் 'சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிதேவர்" எனவும் கூறுவதால், இவன் இராசராச சோழனைப் போரில் வென்று சோழநாட்டைக் கைப்பற்றியமை, பிறகு அந்நாட்டை அவனுக்கு வழங்கியமை ஆகிய இரு நிகழ்ச்சி களும் கி.பி.1219-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. இச்செய்திகள் எல்லாவற்றையும்,

66

பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த

மனுநெறி தழைப்ப மணிமுடி சூடிப்

பொன்னிசூழ் நாட்டிற் புலியாணை போயகலக்

கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர

வெஞ்சின விவுளியும் வேழமும் பரப்பித்

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக் காவியு நீலமும் நின்று கவினிழப்ப

வாவியு மாறு மணிநீர் நலனழித்துக்

கூடமு மாமதிலுங் கோபுரமு மாடரங்கும்

மாடமு மாளிகையும் மண்டபமும் பலவிடித்துத் தொழுதுவந் தடையா நிருபர்தந் தோகையர்

1. Ins. 358 of 1916.

2. Ins. 322 of 1927-28.