பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

வட

திறை கொடுக்காமல் மறுத்தமையேயாம். அதுபற்றிச் சினங்கொண்ட சுந்தர பாண்டியன் கி. பி. 1231-ஆம் ஆண்டில் சோழ நாட்டின் மேல் மீண்டும் படையெடுத்துச் சென்று இராசராசசோழனோடு பெரும் போர் புரிந்து வெற்றி எய்தினான். தோல்வியுற்ற சோழ மன்னன் தன் நாட்டை இழந்து உரிமைச் சுற்றத்தினருடன் வடபுலஞ் சென்றபோது ஆர்க்காடு ஜில்லா வந்தவாசித் தாலூகாவிலுள்ள தெள்ளாறு என்ற ஊரில் பல்லவர் குலக் குறுநில மன்னனாகிய முதற் கோப் பெருஞ்சிங்கனால் பிடிக்கப் பெற்றுச் சேந்தமங்கலத்திலிருந்த கோட்டையில் சிறையில் வைக்கப்பட்டான்.1 வாகைமாலை சூடிய சுந்தரபாண்டியன், சோழர்க்குரிய இரண்டாம் தலை நகராகிய முடிகொண்ட சோழபுரத்திற்குச் சென்று அங்கு வீராபிடேகமும் விசயா பிடேகமும் செய்து கொண்டான். இவனது பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்களுள் சில, “சோணாடு வழங்கி யருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்,” எனவும் அவ்வாண்டில் வரையப்பெற்ற வேறு சில கல்வெட்டுக்கள் “சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து வீராபிஷேகமும் விசயாபிஷேகமும் பண்ணியருளிய வீரசுந்தர பாண்டிய தேவர்”4 எனவும் கூறுவதை நோக்குமிடத்து, இப் பாண்டியனது இரண்டாம் படையெழுச்சி, இவனது பதினைந்தாம் ஆட்சி யாண்டின் பிற்பகுதியில்தான் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதிற் புலனாகின்றது. இவனது மெய்க்கீர்த்தியில் இவன் இரண்டாம் முறை சோழ நாட்டின் மேல் படை யெடுத்துச் சென்று நிகழ்த்திய வீரச்செயல்கள் எல்லாம் குறிக்கப் பட்டிருக்கின்றன. இவன் கல்வெட்டுக்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களிலும் புதுக்கோட்டை நாட்டிலும் காணப்படுகின்றமையின், இவை இவனது ஆட்சிக்குட்பட்டி ருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது.

1. Ep. Ind., Vol. XXIII, No. 27; The Vailur Inscription of Kopperunjinga I.

2. முடிகொண்ட சோழபுரம் என்பது பழையாறை நகரேயாம் (Ins 271 of 1927) இந்நகரில் சோழர்களது அரண்மனை நிலைபெற்றிருந்த இடம் இந்நாளில் சோழமாளிகை என்னுந் தனியூராக இருக்கின்றது.

3. Inscriptions of Pudukkottai State, Nos, 293 and 296.

4. Ibid, Nos. 292, 297 and 298.