பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

கி.பி.1232

2

95

ல் போசள மன்னனாகிய வீர நரசிம்மன் என்பான் பெரும்படையுடன் சென்று, கோப்பெருஞ் சிங்கனைப் போரிற் புறங்கண்டு இராசராச சோழனைச் சிறை மீட்டான்.1 அன்றியும் அவன் காவிரியாற்றங்கரையிலுள்ள மகேந்திர மங்கலத்தில் சுந்தரபாண்டியனைப் போரில் வென்று, இவன் கைப்பற்றியிருந்த சோழ நாட்டை இராசராச சோழனுக்கு அளித்தனன். சோழநாட்டில் நிகழ்ந்த போரொன்றில் போசள வீரசிம்மன்பால் சுந்தரபாண்டியன் தோல்வியுற்று அவனுக்குத் திறை செலுத்தினான் என்று கத்திய கர்ணாமிர்தம் என்னும் கன்னட நூல் கூறுவதும் அதனை உறுதிப்படுத்துதல் அறியற் பாலதாம். ஆகவே, இப் பாண்டிவேந்தன் ஆட்சிக் காலத்தில் சில ஆண்டுகள் வரையில் சோணாடு இவனுக்கு உட்பட்டிருந்தது எனலாம்.3

இனி, இவ்வரசனுடைய பட்டத்தரசி உலகமுழுதுடையாள் என்று வழங்கப்பெற்றனள் என்பது இவன் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. இவன் அவைக்களப் புலவராக விளங்கியவர் காரணை விழுப்பரையர் என்பார். இஃது இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர்த் தாலூக்காவிலுள்ள பெருச்சிக் கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால் புலப்படுகின்றது.

இவ்வேந்தன் காலத்தில் நிலவிய அரசியல் தலைவர்களுள் சோழன் உய்யநின்றாடுவானான குருகுலத்தரையன், கண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன், திருக்கானப் பேருடையான் மழவச் சக்கரவர்த்தி என்போர் குறிப்பிடத் தக்கவராவர். அவர்களைப்பற்றிய சில செய்திகளை அடியிற் காண்க.

1. Ep. Ind., Vol. VII. pp. 167-68.

2. The Colas, Second edition, (1955) pp. 424 -425.

3. இச்சுந்தரபாண்டியன் நிகழ்த்திய முதல் படை யெழுச்சியில் மூன்றாங் குலோத்துங்க சோழன் தோல்வி யெய்தினன் என்று கூறுவர் சிலர். அது தவறு என்பதும் அவ்வேந்தன் இவன் படை யெழுச்சிக்கு முன்னரே இறந்தனன் என்பதும் இவனுடைய இரண்டு படை யெழுச்சிகளிலும் தோல்வி யுற்றவன் மூன்றாம் இராசராச சோழனே என்பதும் யான் எழுதியுள்ள 'பிற்காலச் சோழர் சரித்திரம்' இரண்டாம் பகுதியில் விளக்கப் பட்டுள்ளன.

4. Ins. 75 of 1924.