பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

பின்னர், இவ் இவ் வேந்தன் வேந்தன் வாணர்களுடைய மகத நாட்டையும், கொங்கு மன்னர்களின் கொங்கு நாட்டையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குள்ளாக்கினான். மகதநாடு எனப் படுவது சேலம் ஜில்லாவின் கீழ்ப்பகுதியும் தென்னார்க்காடு ஜில்லாவின் மேற்பகுதியும் தன்னகத்துக் கொண்டு முற்காலத்தில் நிலவிய ஓர் உள்நாடாகும். இப்போது ஆறகளூர் என்று வழங்கும் ஆறகழூரே அதன் தலைநகராகும். அந்நாட்டை அரசாண்டவர்கள் வாணகோவரையர் எனவும், வாணாதிராசர் எனவும் வழங்கப்பெற்ற குறுநிலமன்னர் ஆவர்.

பிறகு, நம் சுந்தரபாண்டியன் தெலுங்குச் சோழனாகிய விசயகண்ட கோபாலனைப் போரிற் கொன்று அவன் ஆட்சிக் குட்பட்டிருந்த காஞ்சிமா நகரைக் கைப்பற்றினான்; அதன் பின்னர் வடபுலஞ் சென்று காகதீய மன்னனாகிய கணபதி என்பவனைப் போரில் வென்று, நெல்லூரைக் கைப்பற்றி அந்நகரில் வீராபிடேகஞ் செய்து கொண்டான்.' விசயகண்ட கோபாலன் தம்பியார் வந்து வணங்கவே, அவர்கட்குரிய நாட்டை யளித்து ஆண்டுதோறும் தனக்குக் கப்பஞ் செலுத்திக் கொண்டு அரசாண்டு வருமாறு பணித்தனன்.3

இங்ஙனம் பல நாடுகளை வென்று தன்னடிப்படுத்தித் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி முடிமன்னனாக விளங்கிய சுந்தரபாண்டியன், மகா ராசாதிராச ஸ்ரீபரமேசுரன், எம் மண்டலமுங் கொண்டருளியவன், எல்லாந் தலையான பெருமாள் என்ற பட்டங்களைப் புனைந்து கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனன் என்பது நம் தமிழகத்தில் ஆங்காங்குக் காணப்படும் இவன் கல்வெட்டுக்களால் நன்கு புலனாகின்றது.

இவ்வரசர் பெருமான், சைவர்களுக்கும் வைணவர்கட்கும் கோயில் என்னும் பெயருடன் சிறந்து விளங்கும் தில்லை

1. Ins.340 of 1913; S. I. I., Vol. IV. Nos. 619 and 625.

2. Ins. 361 of 1913; S. I. I., Vol. IV, Nos. 624 and 631.

3. வாக்கியல் செந்தமிழ்ச் சுந்தர பாண்டியன் வாளமரில்

வீக்கிய வன்கழற் கண்டகோ பாலனை விண்ணுலகிற் போக்கிய பின்பவன் தம்பியார் போற்றப் புரந்தரசில் ஆக்கிய வார்த்தை பதினா லுலகமு மாகியதே.

(செந்தமிழ் - தொகுதி IV, பக்கம் 493)