பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

இவன், தான் பிறந்த சித்திரைத் திங்கள் மூலநாளில் திருவானைக்காத் திருக்கோயிலில் 'சேரனை வென்றான் திருநாள்' என்னுந் திருவிழாவொன்று ஆண்டுதோறும் நிகழ்த் துவதற்கு (முட்டைபாடி வீர தொங்கபுரம் பாகன்குடி) ஆகிய மூன்று ஊர்களை நிவந்தமாக அளித்துள்ளமையால்' இவனுக்குச் சேரனை வென்றான் என்ற சிறப்புப் பெயர் ஒன்று அந்நாளில் வழங்கியுள்ளது என்று தெரிகிறது. தெலுங்கச் சோழனாகிய கண்டகோபாலனைப் போரில்வென்று காஞ்சிமா நகரைக் கைப்பற்றிய காரணம்பற்றி இவன் 'காஞ்சீபுர வராதீசுவரன்’ 'காஞ்சீபுரங்கொண்டான்' என்னும் பட்டங்கள் பெற்றனன் என்பது அறியற்பாலதாகும். அன்றியும், இவன் பல நாடுகளை வென்று எல்லாவற்றிற்கும் தலைவனாக விளங்கியமைபற்றி ‘எல்லாந் தலையான பெருமாள்' என்னுஞ் சிறப்புப்பெயர் ஒன்றும் எய்தியுள்ளனன். இவன் ஆட்சிக்காலத்தில் வழங்கிய நாணயம் ‘எல்லாந்தலையானான்' என்ற பெயருடையதா யிருந்தமை உணரற்பாலது.

3

2

வ்வேந்தன் பாண்டிய இராச்சியத்தை யாண்டும் பரப்பித் தன் ஆணை எங்குஞ் செல்லுமாறு கி. பி. 1271 வரையில் ஆட்சிபுரிந்து இறைவன் திருவடியை யடைந்தான். இவன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னரே முதல் மாறவர்மன் குல சேகரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி ஆட்சி யுரிமை நல்கினான். அதனை நோக்குமிடத்து, அவ்வரசகுமாரன் இவனுடைய புதல்வனாயிருத்தல் வேண்டும் என்று கருதற்கிட முளது.

செங்கற்பட்டு ஜில்லா காஞ்சீபுரந் தாலூகாவிலுள்ள திருப்புட்குழித் திருமால் கோயிலில் நம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் மீது பண்டைப் புலவர் ஒருவர் பாடிய வாழ்த்துப்பா ஒன்று வரையப் பெற்றுள்ளது. அது,

1. Ins. 28 of 1937-38.

4

2. சுந்தரபாண்டியன் காஞ்சியிலும் வீராபிடேகம் செய்து கொண்டான் திருப்புட்குழியிலுள்ள இவனது வடமொழிக் கல்வெட்டொன்று கூறுகின்றது.

என்று

(செந்தமிழ் - தொகுதி IV, பக். 513)

3. S. I. I., Vol. VIII, No. 359.

4. Ibid, Vol. VI, No. 455.