பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

66

வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி

வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையுங் கொண்டவன் வாழ்க சுந்தர மன்னவன் தென்னனே"

என்பதாம்.

105

இனி, இவ்வேந்தன் காலத்ததில் நிலவிய பிற பாண்டி மன்னர்கள், சடையவர்மன் வீரபாண்டியன்', சடையவர்மன் விக்கிரம பாண்டியன் என்போர்.2 இவர்கள் சுந்தர பாண்டியனுக்கு என்ன முறையினர் என்பது தெரிய வில்லை; ஒருகால் உடன்பிறந்தோராக இருப்பினும் இருக்கலாம். இவர்களைப் பற்றிய சில செய்திகளை அடியிற் காண்க. சடையவர்மன் வீரபாண்டியன்

இவன் முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் கி. பி. 1253 முதல் 1268 வரையில் சோழ நாடு நடுநாடு தொண்டைநாடுகளில் பிரதிநிதியாயிருந்து அரசாண்டவன். இவன் மெய்க்கீர்த்திகளுள் 'திருமகள் வளர்” என்று தொடங்குவது மிகப் பெரியது; 'கொங்கீழங் கொண்டு கொடுவடுகு கோடழித்து" என்று தொடங்குவது மிகச்சிறிய தொன்றாம். அவை, இம் மன்னன் கொங்குநாடு, ஈழநாடு, தெலுங்கச் சோழனாகிய விசய கண்ட கோபாலன் நாடு, சோழநாடு இவற்றை வென்றதையும் பல்லவ அரசனாகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனிடம் திறை கொண்டதையும், தில்லைமாநகரில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டதையும் உணர்த்துகின்றன. இவன் மெய்க்கீர்த்திகளில் இவனால் வெல்லப்பட்டவராகச் சொல்லப்பட்டுள்ள கொடு வடுகும் வல்லானும் முறையே தெலுங்கச் சோழனாகிய விசயகண்ட கோபாலனும் பல்லவ 1. The Pandyan Kingdom. pp. 175-78.

2. S. I. I., Vol. VII, No. 761.

3. Inscriptions of the Pudukkottai State No. 366.

-

4. கோச்சடையவர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள். கொங்கீழங் கொண்டு கொடுவடுகு கோடழித்துக் - கங்கை யிருகரையுங் காவிரியுங் கைக்கொண்டு - திங்கள் அரவமுஞ் செழுமலர்த் தாருடன் - பொங்குபுனற் செஞ்சடையோன் பொற்புலியூர் வீற்றிருந்து காடவன் திறையிடக் கண்டினி திருந்து - வீராபிஷேகமும், விஜயாபிஷேகமும் பண்ணி யருளிய ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு.' (Ibid, Nos. 370 and 372)