பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

சடையவர்மன் விக்கிரம பாண்டியன்

2

107

இவன்

இவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலிருந்த ஒரு பாண்டி மன்னன் ஆவன். இவன் கல்வெட்டுக்கள் அச்சிறு பாக்கம், திருப்புட்குழி, திருமாணிகுழி, திருக்கோவலூர் முதலான ஊர்களில்' காணப்படுகின்றமையின் தொண்டை மண்டலத்திலும் நடுநாட்டிலும் சில ஆண்டுகள் அரசப் பிரதிநிதியா யிருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது. தில்லைத் திருக்கோயிலில் வரையப் பெற்றுள்ள சில பாடல்கள் இவன் புரிந்த போர்களையும், அடைந்த வெற்றிகளையும் எடுத்துக் கூறுகின்றன. அவற்றை நோக்குமிடத்து சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் நடைபெற்ற போர்களுள் சிலவற்றை இவன் படைத்தலைமை வகித்து நேரில் நடத்தியிருத்தல் வேண்டும் என்பது உய்த் துணரக் கிடக்கின்றது. இவனுக்குப் புவனேகவீரன் என்னும் சிறப்புப் பெயர் ஒன்று அந்நாளில் வழங்கியது என்பது சில கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது* இவன் கல்வெட்டுக்கள் கி.பி. 1249 முதல் கி. பி. 1258 வரையில் கிடைக்கின்றன. இவனைப் பற்றிய பிற செய்திகள் இப்போது புலப்படவில்லை.

முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

இவன் கி.பி. 1268 முதல் கி. பி. 1311 வரையில் அரசாண்டவன். இவனைக் 'கொல்லங்கொண்ட பாண்டியன்’4

1. S. I. I., Vol. VII Nos. 459 55, 793 and 128.

2. Ins. Nos. 336, 353, and 365 of 1913.

3. S. I. I., Vol. IV, No. 228.

‘ஏந்து மருவி யிரவி புரவியின்முன்

பூந்துவலை வீசும் பொதியிலே - காந்துசின

வேணா டனைவென்ற விக்கிரம பாண்டியன்மெய்ப் பூணாரம் பூண்டான் பொருப்பு.'

‘புயலுந் தருவும் பொருகைப் புவனேக வீரபுனல்

வயலுந் தரளந் தருகொற்கை காவல வாரணப்போர்

முயலுங் கணபதி மொய்த்தசெஞ் சோதி முகத்திரண்டு

கயலுண் டெனுமது வோமுனி வாறிய காரணமே.'

>

(சிதம்பரச் சாசனங்கள் - செந்தமிழ் - தொகுதி IV, பக்கங்கள், 493-94) சிதம்பரத்திற்கு அண்மையில் புவனகிரி என இக்காலத்தில் வழங்கும் ஊர் இவன் பெயரால் அமைக்கப் பெற்றதாகும், புவனேக வீரன்பட்டினம் என்னும் பெயரே பிற்காலத்தில் புவனகிரி என மருவி வழங்கலாயிற்று.

4. Annual Report on South Indian Epigraphy for 1926-27, page 90, Ins. 120 of 1907.