பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

எனவும், 'புவனேகவீரன்'1 எனவும் வழங்குவர். 'தேர்போல்' என்று தொடங்கும் இவனது மெய்க்கீர்த்தி இவனது வரலாற்றை யறிதற்குச் சிறிதும் பயன்படாததாக இருக்கின்றது.

இவன் ஆட்சிக்காலத்தில் பாண்டிய இராச்சியம் செழிப் புற்று உயர்நிலையிலிருந்தது. இவன் அரசாண்ட காலத்தில் 'இத்தாலிய' நாட்டு 'வெனிசு' நகரத்தானாகிய 'மார்க்க போலோ' என்பவன் பாண்டிநாட்டில் பல நகரங்களைச் சுற்றிப் பார்த்து இவனது ஆளுகையைப் பெரிதும் புகழ்ந்து தன் நூலில் எழுதியுள்ளான். அவன், பாண்டிநாட்டிற்குத் தான் சென்ற போது அங்கு பாண்டியர் ஐவர் ஆண்டு வந்தனர் என்றும், அவர்களுள் குலசேகர பாண்டியனே மூத்தவன் என்றும், அவன் தன் தலைநகரில் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தான் என்றும், அவனது உரிமைச் சுற்றத்தினர் சிறந்த அணி கலன்களைப் பூண்டுகொள்வது வழக்கம் என்றும், அவன் தன் இராச்சியத்தில் நடுவுநிலைமையுடன் செங்கோல் செலுத்தி வந்தான் என்றும், வாணிபஞ் செய்வோரிடத்தும், பிறநாட்டு மக்களிடத்தும் அவன் பேரன்புடன் நடந்து வந்தமையின் அன்னோர் அவனது பாண்டி நாட்டிற்குப் போதற்குப் பெரிதும் விரும்பினர் என்றும் தன் குறிப்பில் வரைந்திருக்கின்றான்.'

அந்நாட்களில், பாண்டிநாட்டிற்கு வந்த மகமதியனாகிய 'வாசப்' என்பானும் இவ்வேந்தனாட்சியை அங்ஙனமே புகழ்ந் துரைத்ததோடு இவன் தலைநகரில் ஆயிரத்திருநூறு கோடிப் பொன்னும் முத்துக்களும் வைத்திருந்தான் என்றும் குறித்துள்ளான்.

இவன்காலத்துப் போர்நிகழ்ச்சிகள், இவன் ஈழநாட்டின் மீது படையெடுத்ததும், சேர நாட்டிலுள்ள கொல்லத்தைக் கைப்பற்றியதுமேயாம்.

குலசேகரபாண்டியனும் இவன் தம்பிமார்களும் தம் —த்தலைவர்களுள் மிகச் சிறந்தவனாகிய ஆரியச் சக்கர வர்த்தியின் தலைமையில் ஒரு பெரும்படையை ஈழ நாட்டிற்கு

1. Ins. Nos. 260 and 263 of 1917.

2. Foreign Notices of South India, p. 179.