பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

8. கி.பி. 1310-ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆட்சிபுரிந்த பாண்டியர்கள்

மிகச் சீரிய நிலையிலிருந்த பாண்டிய இராச்சியம், கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் தாழ்ந்த நிலையை அடையத் தொடங்கிற்று. மாறவர்மன் குலசேகர பாண்டியன் புதல்வர் இருவரும் தம்முட் பகைகொண்டு போர் புரிந்து கொண்டிருந்தமையின் உள்நாட்டிற் குழப்பம் மிகுந்தது. அலாவுடீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக் காபூர் என்பான் அதனை யுணர்ந்து பாண்டி நாட்டின்மீது படை யெடுத்துச் சென்று, பல நகரங்களைக் கொள்ளையிட்டுப் பெரும் பொருள் திரட்டிச் சென்றனன். பாண்டி மன்னர்கள் தம் நாட்டைக் காப்பாற்றிக் கொள்ளுதற்கேற்ற ஆற்றலின்றி அயலாரது படையெழுச்சியினால் அளவிலாத் துன்பத்திற் காளாயிருந்தமை அன்னோர்க்குத் திறை செலுத்திவந்த குறுநில மன்னரும் கலகஞ்செய்து சுயேச்சை அடைதற்கு ஏதுவாயிற்று. ஆகவே, கி.பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே பாண்டி வேந்தர்களின் பெருமையும் குறையத் தொடங்கியது எனலாம்.

சடையவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் வீரபாண்டியன் ஆகிய இருவரும் மாறவர்மன் குலசேகர பாண்டியன் புதல்வர்கள் என்பதும், இவர்களுள் சடையவர்மன் சுந்தரபாண்டியன், தன் மாற்றாந்தாயின் மகனும் தன்னிலும்

ளைஞனுமாகிய வீரபாண்டியனுக்குத் தன் தந்தை ஆட்சி யுரிமை நல்கினமைபற்றித் தந்தையை வெறுத்துக் கொலை புரிந்து கி.பி. 1310-ஆம் ஆண்டில் அரியணை ஏறினான் என்பதும் முன்னர் உணர்த்தப்பட்டன. மகமதிய ஆசிரியனாகிய 'வாசப்' என்பான் இச் செய்திகளைக் கூறியுள்ளனன்.1 வேறு சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும், மற்றொரு மகமதிய 1. Elliot and Dowson, Vol. III, pp. 53 and 54.