பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

115

ஆசிரியனாகிய 'அமீர்குசுரு' என்பான், இளவரசர்களாகிய இவ்விருவரும் பெரும் பகை கொண்டு தமக்குள் போர் புரிந்து கொண்டிருந்தனர் என்று குறித்துள்ளனன்.1 ஆயினும் இவ்விரு வேந்தர்களது ஆட்சியும் பாண்டிய நாட்டில் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது இவர்கள் கல்வெட்டுக்களால் நன்கு புலப்படுகின்றது. சடையவர்மன் வீரபாண்டியன் கி. பி. 1296 முதல் 1342-ஆம் ஆண்டுவரை ஆட்சி புரிந்தனன் என்று கல்வெட்டுக்களால் தெரிகிறது. தெரிகிறது. சடையவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டுக்கள், இவன் கி.பி. 1303 முதல் 1319- முடிய அரசாண்டனன் என்று உணர்த்துகின்றன. இம்மன்னர் இருவரும் நிகழ்த்திய போரைப் பற்றிய செய்திகளைத் தெளிவாக இந்நாளில் அறிதற்கியலவில்லை. ஆயினும், இவ்விருவரும் பாண்டி நாட்டில் வெவ்வேறிடங்களில் இருந்து ரே காலத்தில் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டுமென்பதிற் சிறிதும் ஐயமில்லை. மறுபடியும் இவ்விருவர்க்கும் நிகழ்ந்த போரில் தோல்வியுற்ற சுந்தரபாண்டியன் அலாவுடீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூரைத் தென்னாட்டின் மீது படையெடுத்துவருமாறு அழைத்தமை குறிப்பிடத்தக்க தொன்றாம். இது கி. பி. 1310-ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்ததென்று மகமதிய சரித்திர ஆசிரியனாகிய 'வாசப்’ கூறியுள்ளான். இப்படை யெழுச்சியைப் பற்றிய செய்திகளை ‘அமீர்குசுரு' என்பவன் எழுதியுள்ள குறிப்புகளால் ஒருவாறு உணரலாம். அந்நாளிற் பாண்டிநாடு மகமதிய வீரர்களால் கொள்ளையிடப் பெற்றமையின் அது தன் செல்வத்தையும் சிறப்பையும் இழந்து வறுமை யெய்தியது; நாட்டில் அமைதியாக வாழ்ந்து வந்த மக்களெல்லோரும் தம் வாழ்நாளில் என்றும் கண்டறியாத பல்வகை இன்னல்களுக்குள்ளாயினர்; அற நிலையங்களும் கோயில்களும் அழிவுற்றன. சயாவுடீன் பார்னி என்ற மற்றொரு சரித்திராசிரியன், குலசேகர பாண்டியன்

2

1. Ibid, p. 88.

து

2. "முன்னாள் இராசராசன் சுந்தரபாண்டிய தேவர் துலுக்கருடன் வந்த நாளிலே ஒக்கூருடையாரும் இவர் தம்பிமாரும் அனைவரும் அடியாரும்..... ....செத்துங் கெட்டும்போய் அலைந்து ஊரும் வெள்ளத்தாலும் கலகத்தாலும் பாழாயிருக்கிற அளவிலே (S. I. I., Vol. VIII. No. 247) என வருங் கல்வெட்டுப் பகுதி இச் செய்தியை வலியுறுத்தல் காண்க.

39