பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

117

மதுரையிலிருந்து அரசாளவும் தொடங்கினான். சில நாட் களுக்குப் பின்னர், அவன் டில்லிவேந்தனுடைய தொடர்பை முழுவதும் ஒழித்துவிட்டு மதுரையில் அரசு செலுத்தி வந்தான். பாண்டிநாட்டில் மகமதியரது ஆளுகை கி. பி. 1330-ஆம் ஆண்டிற் கணித்தாகத் தொடங்கி, கி. பி. 1378 வரையில் நடைபெற்றது. ஜலாலுடீனுக்குப் பிறகு அங்கு அரசாண்ட மகமதியத் தலைவர்கள் அலாவுடீன் உடான்ஜி, குட்புடீன், கியாசுடீன், நாசிருடீன், அடில்ஷா, பக்ருடீன் முபாரக்ஷா, அலாவுடீன் சிக்கந்தர்ஷா என்போர்.! அவர்களுள் சிலர், தம்பேரால் நாணயங்களும் வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஆளுகையைக் குறிக்கும் இரண்டு கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை நாட்டிலுள்ள இராங்கியம், பனையூர் என்ற ஊர்களில் உள்ளன.' அவர்கள் காலங்களில் உள்நாட்டிற் கலகங்கள் மிகுந்திருந்தமையின், மக்களெல்லோரும் அல்லல் வாழ்க்கையுடையோராயிருந்தனர்.3 அப்போது பல

ருக்கோயில்கள் கொள்ளையிடப் பெற்று நாள் வழிபாடும் ஆண்டு விழாவும் இன்றிப் பல ஆண்டுகள் மூடப்பட்டிருந்தன என்று சில கல்வெட்டுக்கள் கூறுகின்றன.சமயக் கொள்கை பற்றப் பொதுமக்கள் பல்வகைத் துன்பங்களுக்கும் ஆளாயினர் என்பது மகமதிய சரித்திர ஆசிரியனாகிய பின்படூடா(Ibn Batuta)வின் குறிப்புக்களால் தெரிகிறது.

5

மகம்மதியரது ஆட்சிக்காலத்தில் பாண்டி நாட்டில் பாண்டிய அரசர் சிலர் இருந்தனர். அவர்கள், மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1314-1346), சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (1315-1347), மாறவர்மன் வீரபாண்டியன் (1334- 1380), மாறவர்மன் பராக்கிரம பாண்டி யன் (1335-1352) என்போர். இவர்கள் கல்வெட்டுக்கள் பாண்டிநாட்டிற் பல 1. See South India and her Muhammadan Invaders by Dr. S. Krishnaswamy Aiyangar.

2. Inscriptions of the Pudukkottai State, Nos. 669 and 670.

3. Ibid, Nos. 454 and 669.

4. Inscriptions No. 322 of 1927; Ins. Nos. 119 and 120 of 1908; S. I. I., Vol. VIII, No. 750.

5. Foreign Notices of South India, pp. 277 and 279.

6. The Pandyan Kingdom, pp. 245 and 246.