பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 காணப்படுகின்றன. ஆனால்,

அந்நாட்டில்

இடங்களிற் எவ்வெவ்வூர்களி லிருந்து எவ்வெப்பகுதிகளை இவர்கள் ஆண்டு வந்தனர் என்பது புலப்படவில்லை. இவர்கள் தம் நாட்டில் நடைபெற்று வந்த அயலாரது கொடிய ஆட்சியையும், அதனால் மக்கள் எய்திய எல்லையற்ற துன்பங்களையும் ஒழித்தற்கு முயன்றும் இருக்கலாம். அம்முயற்சி பயன்பட வில்லை போலும். அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுழைத்த போசள மன்னனாகிய மூன்றாம் வீரவல்லாள தேவனும் ஊழ்வலியால் வெற்றி பெறாது போர்க்களத்தில் உயிர் துறந்தான்.1

அந்நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்ற விசயநகர வேந்தனாகிய குமார கம்பண்ணன் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தான். அவன் படையெடுத்து வந்தது, மதுரைமா நகரில் நிலைபெற்றிருந்த மகமதியராட்சியை ஒழித்து, மக்களையும் சமயங்களையும் பாதுகாத்தற்கேயாகும்.' குமார கம்பண்ணனது தென்னாட்டுப் படையெழுச்சி கி. பி. 1363-ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அப்படை யெழுச்சியைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் தமிழ்நாட்டிற் சில ஊர்களில் உள்ளன. விசயநகர வேந்தனது படையெழுச்சி யினால் தென்னாட்டில் மகமதியராட்சி ஒருவாறு நிலைகுலைந்தது எனலாம். ஆயினும், அவர்கள் ஆட்சி கி.பி. 1378 வரையில் தளர்ச்சியுற்ற நிலையிலாதல் அங்கு நடை

1. Mysore Gazetteer Vol, II, Part II, Page 1405.

2. குமாரகம்பண்ணன் மனைவி கங்காதேவி யென்பாள் தன் கணவனது வெற்றி குறித்து எழுதிய மதுராவிஜயம் என்ற வடமொழி நூலில் அம் மன்னன் மதுரையின் மேற்படை யெடுத்து வந்தமைக்குக் காரணமாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றாள்:

66

“ஒரு நாள் இரவு குமாரகம்பண்ணன் கனவில் ஒரு தெய்வப்பெண் தோன்றிப் பாண்டி நாட்டில் துலுக்கர் ஆட்சியினால் மக்கள் அடையும் பெருந்துன்பத்தையும் திருக்கோயில்கள் இடிக்கப்படுவதனையும் வைதிக சமய வொழுக்கங்கள் இழிவுபடுத்தப்படுவதனையும் எடுத்துக் கூறித் தன் கையிலுள்ள வாளினை அம்மன்னன் கையிற் கொடுத்து, இது சிவபெருமானுக்கு விசுவகர்மாவினால் கொடுக்கப்பெற்றது; இவ்வாளினைச் சிவபெருமான் பாண்டியர்க்குக் கொடுத்தார்; இதனை எடுத்துப் போர்புரியும் வன்மை பாண்டியர்க்கு இல்லாது போகவே அகத்திய முனிவர் இதனை என்னிடந் தந்து உ உன் கையிற் கொடுக்கும்படி கூறினார்; ஆகவே இவ்வாளினால் துலுக்கரை வென்று பாண்டி நாட்டு மக்களைக்காத்து நலஞ் செய்வாயாக என்று சொல்லி மறைந்தது" என்பது அந்நிகழ்ச்சியாகும்.