பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

119

பெற்றிருத்தல் வேண்டும் என்பது அந்நாட்டிற் கிடைத்துள்ள சில மகமதிய நாணயங்களால் வெளியாகின்றது. மகமதியர்களை வென்ற விசயநகர மன்னன் பாண்டியர்களுள் எவ்வரசனிடத்தில் அந்நாட்டை ஒப்பித்துச் சென்றான் என்பது புலப்படவில்லை. ஆயினும், அவன் பாண்டியர்க்கு உற்றுழி உதவுமாறும், அற நிலையங்களைப் பாதுகாத்து வருமாறும் சில தலைவர்களைப் பாண்டி நாட்டில் ஆங்காங்கு அமர்த்திச் சென்றனன். அத் தலைவர்களும் பாண்டிய இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டு தாமே அரசாள வேண்டுமென்ற எண்ணத்துடன் காலங்கருதிக் கொண்டிருந்தனர். பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பதினைந்தாம் நூற்றாண்டிலும் பாண்டிய அரசர்கள் கல்வெட்டுக்கள் மதுரை ஜில்லாவிற் காணப்பட வில்லை; திருநெல்வேலி ஜில்லாவில் மாத்திரம் இவர்கள் கல்வெட்டுக்கள் உள்ளன. ஆகவே, பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவர்கள் தம் தலைநகராகிய மதுரையையும், அதனைச் சூழ்ந்துள்ள நாட்டையும் இழந்து திருநெல்வேலி ஜில்லாவிற்குச் சென்று தங்கியிருந்தனராதல் வேண்டும்.

1

இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரில் கி. பி. 1453-ஆம் ஆண்டில் வரையப்பெற்றுள்ள ஒரு கல்வெட்டு, மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் என்று கூறுகின்றது. அன்றியும், பாண்டியர்க்குத் திறைசெலுத்திவந்த குறுநில மன்னர்களான மாவலிவாணாதிராயர்கள் தம்மை 'மதுராபுரி நாயகன்' எனவும், 'பாண்டிய குலாந்தகன்' எனவும், கி. பி. 1483-ல் சிறப்பித்துக் கூறிக்கொள்வதைப் புதுக்கோட்டை நாட்டில் நெக்கோணம் என்ற ஊரிலுள்ள ஒரு கல்வெட்டில்' காணலாம். ஆகவே, பதினைந்தாம் நூற்றாண்டில் மதுரையி லிருந்து அரசு செலுத்தியவர்கள் வாணாதிராயர்கள் என்பது நன்கு வெளியாகின்றது. பாண்டியர்கள் மிக்க தளர்ச்சி யெய்தியிருந்த நாட்களில் வாணாதிராயர்கள் இவர்களைப் போரில் வென்று மதுரையைக் கைப்பற்றிக் கொண்டதோடு. அதனைச் சூழ்ந்துள்ள நாட்டைத் தாமே சுயேச்சையாக ஆட்சி

1. Travancore Archaeological Series, Vol. I, page 46; Ins. 577 of 1926. 2. Inscriptions of The Pudukkotai State, No. 672.