பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

புரியவும் தொடங்கினர். அவர்கள் பாண்டிய குலாந்தகன் என்று தம்மைச் சிறப்பித்துக் கூறிக்கொள்வது ஒன்றே, பாண்டியரிடத்து அன்னோர் கொண்டிருந்த பெரும் பகைமையை நன்கு விளக்கா நிற்கும். அன்றியும், புதுக்கோட்டை நாட்டில் குடுமியான் மலையிலுள்ள இரண்டு கல்வெட்டுக்கள், பாண்டியர்கள் வாணாதிராயர்களிடம் தோல்வியுற்று வேற்றிடம் சென்றனர் என்பதை வலியுறுத்துகின்றன. மதுரைமாநகரைவிட்டு நீங்கிய பாண்டியர்கள் தென்பாண்டிநாட்டை அடைந்து அங்கு அரசு செலுத்தி வந்தனரென்பது பல கல்வெட்டுக்களாற் புலப் படுகின்றது. இவர்கள் ஆளுகையும் அங்குப் பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரையில் நடைபெற்றமை அறியற் பாலதாகும்.

1

H

1. மால்விட்ட படைதுரந்து வடுகெறிந்த மகதேசன் வடிவேல் வாங்கக் கால்விட்ட கதிர்முடிமே லிந்திரனைப் புடைத்ததுமுன் கடல்போய் வற்ற வேல்விட்ட தொருதிறலு முகிலிட்ட

தனிவிலங்கும் வெற்பி லேறச்

சேல்விட்ட பெருவலியு மாங்கேவிட்

டுடனடந்தான் தென்னர் கோவே.

(Inscriptions of the Pudukkottai State, No. 653.)

இழைத்த படியிதுவோ வெங்கணா வென்றென்

றழைத்த வழுகுர லேயால் - தழைத்தகுடை

மன்னவர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த தென்னவர்கோன் போன திசை.

(Ibid. No. 678)