பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

கல்வெட்டுக்கள் திருக்குற்றாலத்திலும் திருப்புத்தூரிலும் உள்ளன.1 இவர்கள் எல்லோரும் தென்பாண்டி நாட்டில் எவ்வெவ் விடங்களிலிருந்து எவ்வெப்பகுதிகளை ஆட்சி புரிந்தனர் என்பது புலப்படவில்லை.

சடையவர்மன் பராக்கிரமபாண்டியன்

பிற்காலப் பாண்டியர்களுள் இவ்வேந்தன் மிகுந்த பெருமை வாய்ந்தவனாவன். இவன் கி. பி. 1411 முதல் 1463 வரையில் அரசாண்டவன்; செந்தமிழ்ப் புலமையும் வடமொழிப் பயிற்சியும் உடையவன். இவனைப் பொன்னின் பெருமாள்' எனவும், மானகவசன் எனவும் அந்நாளில் வழங்கியுள்ளனர். தென்காசிக் கோயிவிலுள்ள 'பூமிசை வனிதை நாவினிற் பொலிய' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி' இவன் போர்ச் செயல்களையும் திருப்பணிகளையும் குணச்சிறப்பையும் நன்கு விளக்குகின்றது.

இம்மன்னன், சங்கரநயினார்கோயில், திருக்குற்றாலம், முதலைக்குளம், வீரகேரளம்புதூர் முதலான ஊர்களில் தன் பகைஞரைப் போரில் வென்று புகழெய்தினான் என்று இவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. இவன் திருக்குற்றாலப் போரில் சேரனை வென்றான் என்பது, தளவாய் அக்கிரகாரச் செப்பேடு களால் வெளியாகின்றது.4

5

வன் விந்தனூர் முதலான ஐந்து ஊர்களில் அகரங்கள் அமைத்து அந்தணர்களுக்கு அளித்தமையும், திருக்குற்றாலம் திருப்புடைமருதூர் இவற்றிலுள்ள சிவாலயங்களில் மண்டபங்கள் அமைத்தமையும், திருநெல்வேலியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு அர்த்தயாம வழிபாட்டிற்கு நிபந்தங்கள் விட்டமையும் இவன் மெய்க்கீர்த்தியால் அறியப்படுஞ் செய்திகளாம்.

1. The Pandyan Kingdom p. 248.

2. Travancore Archaeological Series, Vol. I, p. 97.

3. Ibid, p. 91.

4. T. A. S., Vol. I. pp. 126 and 133.

5.

செங்கோட்டைத் தாலூகாவிலுள்ள இவ்விந்தனூர்க்குப் பராக்கிரம பாண்டியச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் முற்காலத்தில் இருந்தமை உணரத்தக்கது.