பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

இப்பெருங் கோயிலில் பிற்காலப் பாண்டியர்கள் எல்லோருக்கும் முடிசூட்டு விழா நடைபெற்று வந்தமை உணரற்பாலதாகும்.

இவன் தன் ஆட்சியில் விசுவநாதப்பேரேரி என்ற பெயருடைய ஏரி ஒன்று வெட்டுவித்திருப்பது குடிகளது நலத்தின் பொருட்டு இவன் புரிந்த அரிய செயல்களுள் ஒன்றாகும். சிவபத்தியிலும் செங்கோன் முறையிலும் சிறந்து விளங்கிய இவ்வேந்தன் கி. பி. 1463 கி.பி. ல் விண்ணுல

கடைந்தான்.'

2

சடையவர்மன் குலசேகரபாண்டியன்

-

பராக்கிரம பாண்டியன் தம்பியாகிய இவ்வரசன் கி. பி. 1429 முதல் 1473 வரையில் ஆட்சி புரிந்தவன். எனவே, இவன் தன் தமையனுடன் சேர்ந்து தென்பாண்டிநாட்டை அரசாண்ட வனாதல் வேண்டும். பராக்கிரம பாண்டியன் காலத்தில் தொடங்கப்பெற்று முடிவு பெறாமலிருந்த ஒன்பதுநிலைக் கோபுரத் திருப்பணியை இவன் முடித்தமை அறிதற்குரிய தாகும்.3

3. சேலே றியவயற் றென்காசி யாலயந் தெய்வச்செய லாலே சமைந்ததிங் கென்செய லல்ல வதனையின்ன மேலே விரிவுசெய் தேபுரப் பாரடி வீழ்ந்தவர்தம் பாலேவல் செய்து பணிவன் பராக்ரம பாண்டியனே.

4. சாத்திரம் பார்த்திங் கியான்கண்ட பூசைகள் தாம்நடத்தி யேத்தியன் பால்விசுவ நாதன்பொற் கோயிலென் றும்புரக்க பார்த்திபன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடனங்

கோத்திரந் தன்னிலுள் ளார்க்கு மடைக்கலங் கூறினனே.

Travancore Archaeological Series, Vol. I, pp. 96 & 97.

1. 'நாம் நவமாகக்கண்ட விசுவநாதப் பேரேரிக்குப் பெருநான்கெல்லையாவது’

– Travancore Archaeological Series, Vol. I, page 51.

2. இவ் வேந்தன் வானுலகெய்தியஞான்று ஒரு புலவர் பாடிய பாடல் தென்காசிக் கோயிலிற்

பொறிக்கப் பெற்றுள்ளது. அஃது அடியில் வருமாறு:

கோதற்ற பத்தி யறுபத்து மூவர்தங் கூட்டத்திலோ

தீதற்ற வெள்ளிச் சிலம்பகத் தோசெம்பொ னம்பலத்தோ

வேதத் திலோசிவ லோகத் திலோவிசுவ நாதனிரு

பாதத் திலோசென்று புக்கான் பராக்ரம பாண்டியனே.

3. Ibid, page 103.

Travancore Archaeological Series, Vol. I, page 97.