பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

மற்றொரு காரணமும் உண்டு உண்டு. அது, சேரமன்னன் சில ஆண்டுகள் அவனுக்குக் கப்பஞ் செலுத்தாதிருந்தமையேயாம்.

அச்சுததேவராயன் இத்தகைய அரிய உதவி புரிந்தமை பற்றிச் சீவல்லபன் தன் மகளை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்து மகிழ்ச்சியுற்றான். இந்நிகழ்ச்சியினால் பாண்டியர் குலத்திற்குப் பழைய பெருமையும் சிறப்பும் மீண்டும் உண்டாகுமாறு தான் செய்துவிட்டதாக எண்ணி 'இறந்தகால மெடுத்தவன்' 'பாண்டிய ராச்சியதாபனாசாரியன்' என்ற பட்டங்களை இவன் புனைந்து கொண்டனன் போலும். சடையவர்மன் பராக்கிரம குலசேகரபாண்டியன்

இவன் அபிராம பராக்கிரமபாண்டியனுடைய முதற் புதல்வன். இவனுடைய கல்வெட்டுக்கள் கி. பி. 1543 முதல் 1552 வரையில் உள்ளன. இவனைப்பற்றி யாதும் தெரியவில்லை. நெல்வேலிமாறன்

இவன் அபிராம பராக்கிரமபாண்டியனுடைய இரண்டாவது புதல்வன்; கி. பி. 1552 முதல் 1564 வரையில் ஆட்சிபுரிந்தவன். இவனுக்கு வீரபாண்டியன், குலசேகர பாண்டியன், பொன்னின் பாண்டியன், தர்மப்பெருமாள், அழகன் பெருமாள் என்ற வேறு பெயர்களுமுண்டு. இவன் புலவர்கள் பாடிய வீரவெண்பா மாலை கொண்டவன் என்று தென்காசியிலுள்ள கல்வெட்டு உணர்த்துகின்றது.'

சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்

ஒரு

இவன் நெல்வேலிமாறன் முதல் மகன்; கி. பி. 1564 முதல் 1604 வரையில் அரசுசெலுத்தியவன். இவனை அழகன் சீவலவேள் எனவும் வழங்குவர். தன் தந்தையாகிய நெல்வேலி மாறனை நினைவுகூர்தற் பொருட்டுத் தென்காசியில் குலசேகர முடையா ராலயம் ஒன்றை இவன் எடுப்பித்திருப்பது குறிப்பிடத் தக்க நிகழ்ச்சியாகும். இதன் அண்மையில் இவன் எடுப்பித்த

1. Ibid, p. 56.

3

2.T. A. S., Vol. I, No. VII.

3. Travancore Archaeological Series, Vol. I, page 50.