பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

127

விண்ணகரம் ஒன்றும் உளது. இவன் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங்கியவன் என்பது இவன் பாடியுள்ள சில தமிழ் நூல்களாற் புலப்படுகின்றது.

வடமொழியில் ஹர்ஷன் இயற்றியுள்ள நைஷதம் என்ற நூலை இவன் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ளான். இது நைடதம் என்று வழங்கப்படுகிறது. அந்நூலை மொழி பெயர்த் தற்கு இவனுக்கு உதவிபுரிந்தவர் நைஷதம் இராம கிருஷ்ணர் என்ற வடமொழிப் புலவர் ஆவர்.' இவ்வேந்தன் பாடியுள்ள பிறநூல்கள் கூர்மபுராணம் வாயுசங்கிதை காசி காண்டம் இலிங்கபுராணம் நறுந்தொகை என்பன. இவன் சிவபெருமானிடத்தில் மிகுந்த ஈடுபாடுடையவனாக ஒழுகி வந்தனன் என்பது இயற்றியுள்ள சைவ புராணங்களால் நன்கு விளங்கும். வரதுங்கராம பாண்டியன்

வன்

இவன் பராக்கிரம குலசேகரபாண்டியனுடைய இரண் டாவது மகன்; கி. பி. 1588-ல் முடிசூட்டப்பெற்றவன். அபிராமசுந்தரேசுவரன் எனவும், வீரபாண்டியன் எனவும் செப்பேடுகளில் இவன் குறிக்கப்பெற்றிருத்தல் உணரத்தக்கது.’ அதிவீரராம பாண்டியனாட்சிக் காலத்தில் தென்பாண்டி நாட்டிற் சில பகுதிகளைக் கரிவலம்வந்த நல்லூரிலிருந்து இவன் அரசாண்டவனாதல் வேண்டும் என்பது சில குறிப்புகளால் அறியப்படுகின்றது. இவன் வில்லவனை வென்றானென்றும் வல்லமெறிந்தானென்றும் தென்காசியிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. இவனால் வென்றடக்கப்பெற்ற சேரமன்னன்

1. Ibid, p. 85.

4

3

2. Ibid, pp. 115 & 133.

3. T. A. S., Vol. I., p. 125.

4.

பற்றலர்மண் கொள்ளும் பணிந்தார்க் கரசளிக்குங் கொற்ற முயர்க்குமறங் கூறுமே - விற்றடந்தோள் வில்லவனை வென்றுகொண்ட வீரமா றன்செழியன் வல்லமெறிந் தானேந்து வாள்.

திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள தென்காசியில் வாழ்ந்த கலியன் கவிராயர் என்பவர் வரதுங்கராமபாண்டியன் முடிசூட்டு விழாவில் நாண்மங்கலமும், குடைமங்கலமும், வாண்மங்கலமும் பாடி அரசனைப் பாராட்டியுள்ளனர். அவற்றுள் இப்பாடல் வாண்மங்கலமாகும். 'கல்வெட்டுக் களால் அறியப்படும் சில தமிழ்ப்புலவர்கள்' என்ற எனது கட்டுரையில் இவற்றைக் காணலாம். (செந்தமிழ்த் தொகுதி 29, பக்கங்கள் 291-296)