பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

தி.வை.சதா

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 வன் யாருடன் போர் புரிந்தான்

யாவன் என்பதும், வல்லத்தில்

என்பதும் புலப்படவில்லை.

அதிவீரராமபாண்டியனைப் போல் இவ்வேந்தனும் தமிழ்மொழியில் பெரும்புலமை படைத்தவன் என்பது இவன் இயற்றியுள்ள தமிழ்நூல்களால் நன்கு துணியப்படும். அவை, பிரமோத்தரகாண்டம், கருவைக் கலித்துறையந்தாதி, கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி என்பன. இவனும் சிவபெருமானிடத்து ஒப்பற்ற பத்தியுடையவனா யிருந்தனன் என்பது வனியற்றிய நூல்களால் இனிது புலனாகும்.

1

அதிவீரராமபாண்டியற்குச் சுவாமிதேவரும் வரதுங்கராம பாண்டியற்கு வேம்பற்றூர் ஈசான முனிவரும் ஞானாசிரியர் களாக இருந்திருத்தல் வேண்டும் என்பது இவர்கள் தம் நூல்களிற் கூறியுள்ள குருவணக்கங்களாற் பெறப்படுகின்றது. வரகுணராம குலசேகர பாண்டியன்

-

கி. பி. 1613-ல் முடிசூட்டப்பெற்ற வ்வேந்தன் முன்னவர்களுக்கு யாது முறையுடையான் என்பது தெரிய வில்லை. இவன் வேதவிதிப்படி வேள்விபுரிந்தவன். இதுபற்றியே இவன் குலசேகரசோமாசியார் என்று வழங்கப்பெற்றமை குறித்தற்குரிய தாகும்.2 கி. பி. 1748 ல் இருந்த மற்றொரு பாண்டியன் இவனைப் போலவே வரகுணராம பாண்டிய குலசேகர தேவதீட்சிதர் என்று தன்னைச் சிறப்பித்துக் கொண்டமை ஈண்டு உணரற் பாலது. ஆகவே, பிற்காலப் பாண்டியர்களுள் சிலர் சோமாசியார், தீட்சிதர் என்ற பட்டங்கள் புனைந்துகொண்டு அவற்றால் தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்ள விரும்பினர் என்பது வெளியாதல் காண்க.

இக்காலப் பகுதியில் வாழ்ந்த பாண்டியர்களுள் பெரும் பாலோர் விசயநகரவேந்தர்கட்குக் கப்பஞ் செலுத்திவந்த குறுநிலமன்னரேயாவர். இங்ஙனம் குறுநிலமன்னராயிருந்த

1. இவ்வந்தாதிகள் அதிவீரராமபாண்டியனால் பாடப் பெற்றவை என்பர். அது தவறாகும். 2. Travancore Archaeological Series, Vol. I, Page 418.